• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயில்வே விதிமீறல் புகார்களில் இனி ஸ்பாட் ஃபைன்… வெளியான முக்கிய அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரயில்வே விதிமீறல் புகார்களில் இனி ஸ்பாட் ஃபைன்… வெளியான முக்கிய அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 09, 2026 7:36 AM IST

ரயில்வே விதிமீறல் அபராதம் உயர்வு: ரயில்வே பாதுகாப்புப் படைக்கு வசூலிக்கும் அதிகாரம். ஜூன் 20 முதல் அமல்.

கோப்புப் படம்
கோப்புப் படம்

நீதிமன்றங்களின் வழக்கு சுமையைக் குறைக்கும் வகையில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களிடம் உடனுக்குடன் அபராதம் வசூலிக்க ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே செயல்​பாடு​களை வலிமைப்​படுத்​த​வும், பயணி​களின் ஒழுக்​கத்தை மேம்​படுத்​து​வும் வகை​யில், ரயில்வே சட்​டம் 1989-இன் படி, பல விதி​கள் திருத்​தப்​பட்​டுள்​ளன.அதன்​படி, ரயில்​களில் மகளிர் பெட்​டிகளில் ​ஆண்கள் பயணித்​தால் 500 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

உரிய டிக்​கெட் இல்​லாமல் பயணிப்​போருக்கான அபராதத் தொகை 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் நிலை​யங்​களில் அனுமதியின்றி விற்​பனை செய்​தால் 2 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற விதி மீறலில் ஈடுபடுவோரிடம் உடனுக்குடன் அபராதம் வசூலிக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விதிமீறலில் ஈடுபடுவோர் ரயில்வே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதம் செலுத்தும் நிலை இருந்து வந்தது. தற்போது அபராதம் செலுத்த மறுத்​தால் மட்டும், நீதி​மன்​றம் வாயி​லாக 5 ஆயிரம் வரை அபராதம் செலுத்​தும் வகை​யில் விதிகள் மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளன.

இந்த புதிய விதிமுறைகள் ஜூன் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் பாலக்காடு கோட்டத்தில் 3 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 7 லட்சம் ரூபாயும் வசூலிக்கப்பட்டது. முன்னதாக, ரயில்வே நீதிமன்றங்களில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் 30 சதவீதத்தை மாநில அரசும், 50 சதவீதத்தை ரயில்வேயும் பெற்று வந்தன. தற்போது ரயில்வே பாதுகாப்புப் படை மூலம் அபராதம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதால், முழுத் தொகையையும் ரயில்வே நிர்வாகத்திற்கே செல்ல உள்ளது….

Read More

Previous Post

Tamilmirror Online || சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

Next Post

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு நினைவுச்சின்னம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!! | CM Vijay Returns to Karur: Emotional Speech, Police Negligence Allegations and memorial for victims

Next Post
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு நினைவுச்சின்னம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!! | CM Vijay Returns to Karur: Emotional Speech, Police Negligence Allegations and memorial for victims

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு நினைவுச்சின்னம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!! | CM Vijay Returns to Karur: Emotional Speech, Police Negligence Allegations and memorial for victims

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin