• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி – கேமரா கலைஞர் மோதல்: நடுநிலையான விசாரணைக்கு கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரணிலின் பாதுகாப்பு அதிகாரி – கேமரா கலைஞர் மோதல்: நடுநிலையான விசாரணைக்கு கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவருக்கும் ஊடக நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கேமரா கலைஞர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நியாயமான நடுநிலையான மற்றும் விரைவான விசாரணைகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம் (Free Media Movement) அதிகாரிகளிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.


சுதந்திர ஊடக இயக்கத்தின் பதில் அமைப்பாளரும் செயலாளருமான திலீஷா அபேசுந்தரவின் (Dilisha Abeysundara) கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைமிக்க சம்பவம் 

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறிய போது அவரது பாதுகாப்பு அதிகாரிக்கும் கேமரா கலைஞருக்கும் இடையே இந்தச் சர்ச்சைமிக்க சம்பவம் இடம்பெற்றது.

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி - கேமரா கலைஞர் மோதல்: நடுநிலையான விசாரணைக்கு கோரிக்கை | Fmm Urges Probe Into Ranil Guard Cameraman Clash

இந்த தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் பாதுகாப்பு அதிகாரி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், கொம்பனித்தெரு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர் கொம்பனித்தெரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தி இருந்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் 

இந்தநிலையில் விஐபி (VIP) பாதுகாப்பு அதிகாரிகள் நபர் ஒருவரின் அல்லது இடத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கடமையைக் கொண்டிருப்பது போல பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கும் விசேட கடமைப் பொறுப்பு உள்ளது என சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இரு தரப்பினரும் பரஸ்பர புரிதலுடனும் ஒருவருக்கொருவர் தொழில்முறை கண்ணியத்தைப் பேணும் வகையிலும் செயல்படுவது அத்தியாவசியமானது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி - கேமரா கலைஞர் மோதல்: நடுநிலையான விசாரணைக்கு கோரிக்கை | Fmm Urges Probe Into Ranil Guard Cameraman Clash

ஊடகவியலாளர் ஒருவரைக் இலக்கு வைத்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைச் சாதாரணமானதாகக் கருத முடியாது என்றும் இரு தரப்பினரின் தொழில்முறைப் பின்னணி காரணமாக சமூகத்தின் கவனம் இதன் மீது திரும்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, உண்மையான தகவல்களை உடனடியாக வெளிக்கொண்டுவரும் வகையில் நியாயமான மற்றும் விரைவான விசாரணைகளை நடத்துமாறு அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நேபாளப் பேரிடரில் மாயமான 55 மலேசியர்களில் ஒருவர் 37 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு: குடும்பத்தினருடன் நெகிழ்ச்சி இணைப்பு! | Makkal Osai

Next Post

இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.. விரைவில் குணமடைய வாழ்த்து! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.. விரைவில் குணமடைய வாழ்த்து! | India News (இந்தியா செய்திகள்)

இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.. விரைவில் குணமடைய வாழ்த்து! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin