• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.. விரைவில் குணமடைய வாழ்த்து! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.. விரைவில் குணமடைய வாழ்த்து! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 02, 2026 11:49 AM IST

விமானி ஸ்மித் உடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

ஃப்ளை துபாய் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, காக்பிட்டில் விமானிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது சக உதவி விமானி, கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நிலையிலும் தளராத கேப்டன் ஸ்மித், காக்பிட் கதவைத் திறந்து உடனடியாக சிக்னல் கொடுத்தார். இதனால் விமானத்தின் ஏனைய பணியாளர்கள் மற்றும் பயணிகள் காக்பிட் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்த முடிந்தது.

இதனைத் தொடர்ந்து விமானம் சவூதி அரேபியாவின் தபுக் நகரில் உடனடியாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஸ்மித்தின் இந்த சாதனையைக் குறிப்பிட்டுப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்த இந்தியப் பைலட்டின் சாதுரியமான செயலால் 9/11 போன்றதொரு மாபெரும் விமானப் பேரழிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” எனக் புகழாரம் சூட்டியிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது இந்த வீரச் செயலைப் பாராட்டியுள்ளார்.

மேலும் சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய வர்த்தகத் தூதரகம் ஆகியவை கேப்டன் ஸ்மித்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் செல்லும் தனது அனைத்து விமான சேவைகளையும் ஃப்ளைதுபாய் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: மகளிருக்கான இலவச ‘வெற்றி பயண திட்டம்’… எந்தெந்த பேருந்துகளில் செல்லலாம்..? வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தொடர்ந்து விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட அவசரநிலையின்போது, மிகச் சிறந்த மனஉறுதியுடனும் துணிச்சலுடனும் செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரின் (Captain Smit Machchhar) குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சாரின் மனைவி சோனல், தந்தை பூபேந்திர பாய் மற்றும் தாயார் கீதா பென் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கேப்டன் ஸ்மித்தின் அசாதாரண வீரத்தையும் மனதிடத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிலையில், விமானி ஸ்மித் உடன் பிரதமர் மோடி தற்போது பேசியுள்ளார். அப்போது இக்கட்டான சூழலில் தீரத்துடன் செயல்பட்டது எப்படி என தனது அனுபவத்தை விமானி ஸ்மித், பிரதமர் மோடியிடம் பகிர்ந்தார். மேலும், விமானி ஸ்மித் விரைவாக உடல்நலம் பெற வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Read More

Previous Post

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி – கேமரா கலைஞர் மோதல்: நடுநிலையான விசாரணைக்கு கோரிக்கை

Next Post

பழங்களில் ஆபத்தான இரசாயனமா? 2027 முதல் கடும் சட்ட நடவடிக்கை – அமைச்சர் அதிரடி அறிவிப்பு! – Sri Lanka Tamil News

Next Post
பழங்களில் ஆபத்தான இரசாயனமா? 2027 முதல் கடும் சட்ட நடவடிக்கை – அமைச்சர் அதிரடி அறிவிப்பு! – Sri Lanka Tamil News

பழங்களில் ஆபத்தான இரசாயனமா? 2027 முதல் கடும் சட்ட நடவடிக்கை – அமைச்சர் அதிரடி அறிவிப்பு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin