Last Updated:
டெல்லி அணி 77.3 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஹிர்தீக் ஷோகீன் 56 ரன்களும், ஆயுஷ் தோசிஜா 45 ரன்களும் சேர்த்தனர்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பெங்கால் அணிக்காக விளையாடிய மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (Mohammed Shami), டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
சி பிரிவு லீக் ஆட்டத்தின் முதல் நாளில் டாஸ் வென்ற பெங்கால் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பெங்காலின் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்த ஆடுகளத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஷமி மற்றும் சக பவுலர்கள் டெல்லி அணியின் பேட்டிங் வரிசையைச் சரித்தனர்.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களைக் திணறடித்த முகமது ஷமி, யாஷ் துல், ஆயுஷ் தோசிஜா, ஹிர்தீக் ஷோகீன் மற்றும் திவிஜ் மெஹ்ரா ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முடிவில் டெல்லி அணி 77.3 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஹிர்தீக் ஷோகீன் 56 ரன்களும், ஆயுஷ் தோசிஜா 45 ரன்களும் சேர்த்தனர். பெங்கால் தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய முகமது ஷமி வெறும் 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் அமீர் கனி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய அணியின் தேர்வுக்குழு மற்றும் பிசிசிஐ மாற்றங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்தச் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஷமி மீண்டும் தேசிய அணிக்குத் திரும்புவதற்கான தனது வலுவான சிக்னலை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்துப் பேசிய ஷமி, இந்திய அணியில் விளையாடாவிட்டாலும் அது தனக்கு இழப்பல்ல என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ரஞ்சி கோப்பைத் தொடரின் பிற போட்டிகளிலும் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா அணியைச் சேர்ந்த வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர்.


