• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யுபிஐ-ல் தவறாக பணம் செலுத்தினால் திரும்பப் பெறுவது எப்படி? – ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் | How to get refund on wrong UPI payment RBI guidelines

GenevaTimes by GenevaTimes
August 20, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
யுபிஐ-ல் தவறாக பணம் செலுத்தினால் திரும்பப் பெறுவது எப்படி? – ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் | How to get refund on wrong UPI payment RBI guidelines
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: யுபிஐ பயனர்கள் தவறுதலாக பணம் செலுத்தினால் அதனை திரும்பப் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கியின் விரிவான வழிகாட்டுதல் குறித்து அறிவோம்.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

சமயங்களில் யுபிஐ பயனர்கள் தவறுதலாக பணம் செலுத்திய சூழலையும் எதிர்கொள்வார்கள். மொபைல் எண், வங்கி கணக்கு போன்றவற்றில் கவனக்குறைவாக செய்யும் தவறுகள் நிதியிழப்பு அபாயத்தை ஏற்படுத்தும். அப்படி தவறுதலாக மேற்கொண்ட பண பரிவர்த்தனை தெரிந்த நபர் என்றால் அதனை பெறுவது எளிது. அப்படி இல்லாத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

தவறான யுபிஐ அட்ரஸுக்கு பணம் அனுப்பினால் செய்ய வேண்டியது…

  • பணம் செலுத்திய யுபிஐ பயனர், அதனை பெற்றவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லலாம். மேலும், பணத்தை திரும்பப் பெறுவதில் அவரது ஒத்துழைப்பை கோரலாம்.
  • சம்பந்தப்பட்ட யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்டை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லலாம். ரீஃபண்ட் சார்ந்து வேண்டிய தகவல்களை பயனர்கள் தர வேண்டியது இதில் அவசியமானதாக உள்ளது.
  • நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்ட் மூலம் தீர்வு எட்டாத பட்சத்தில் இந்த புகாரை வழங்கலாம்.
  • தவறான யுபிஐ பரிவர்த்தனை குறித்து பயனர் தனக்கு கணக்கு உள்ள வங்கியை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.
  • தவறான யுபிஐ பரிவர்த்தனை குறித்து 1800-120-1740 இந்த டோல் ப்ரீ எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
  • தவறான க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து, பணம் அனுப்பி இருந்தால் சம்பந்தப்பட்ட யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்டை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லலாம். அவர்கள் சொல்லும் வழிகாட்டுதலை பின்பற்றலாம்.



Read More

Previous Post

உலர்ந்த பூக்களிலிருந்து மாதம் ரூ.4 லட்சம் வருமானம்… அசத்தும் இளைஞரின் உத்வேக கதை!

Next Post

17 ஸ்டார்ட்அப்கள் தோல்வி… மனம் தளராமல் ரூ.40,000 கோடி தொழிலை உருவாக்கிய இளைஞர்!

Next Post
17 ஸ்டார்ட்அப்கள் தோல்வி… மனம் தளராமல் ரூ.40,000 கோடி தொழிலை உருவாக்கிய இளைஞர்!

17 ஸ்டார்ட்அப்கள் தோல்வி... மனம் தளராமல் ரூ.40,000 கோடி தொழிலை உருவாக்கிய இளைஞர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin