• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த மாபெரும் போராட்டம்

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த மாபெரும் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பொதுமக்களின் காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலகம் முன்பாக காணி உரிமையாளர்கள் சற்றுமுன்னர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், அரசியல் வாதிகள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டக் களத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த மாபெரும் போராட்டம் | Big Protest Infront Of Jaffna District Secretariat

செய்திகள் – த.பிரதீபன்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து தமிழ்
மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்றுடன் (15) 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையில், தங்களை
உடனடியாகச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகம்
முன்பாக இன்று காலை மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.



உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம்
15ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்
இராணுவ நடவடிக்கையினால் தங்களின் பூர்வீக மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இராணுவத்தினரை வெளியேற்றல்


இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும்,
அகதிகளாகியுள்ள இப்பகுதி மக்களை இன்னமும் அவர்களின் சொந்த நிலங்களில்
மீள்குடியேற அனுமதிக்காது, மக்களின் வளமான காணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும்
தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த மாபெரும் போராட்டம் | Big Protest Infront Of Jaffna District Secretariat



இந்தநிலையில், மக்களின் பூர்வீகக் காணிகளில் இருந்து இராணுவத்தினரை உடனடியாக
வெளியேற்றி, தங்களைச் சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என
வலியுறுத்தி இந்தப் போராட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு அறிவித்துள்ளது.



தங்களின் வாழ்வாதார உரிமைக்கான இந்த நியாயமான போராட்டத்துக்கு எவ்வித கட்சிப்
பேதங்களுமின்றி, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும், அரசியல்
தலைமைகளும், பொதுமக்களும் முழுமையான ஆதரவை வழங்கிப் போராட்டத்தில் கலந்துகொள்ள
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதேவேளை, யாழ். மாவட்ட செயலகப் போராட்டத்துக்கு இணையாக, வலிகாமம் வடக்கு உயர்
பாதுகாப்பு வலய எல்லையான பலாலி சந்திப் பகுதியிலும் இன்று காலை 8.30 மணி முதல்
மாலை 4.30 மணி வரை மற்றுமொரு கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

செய்தி – ராகேஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

ஜோகூரில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வீட்டுப் பணியாளர்களுக்கு இந்தோனேசியத் தூதரகம் அடைக்கலம் அளிக்கிறது

Next Post

14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! | US-Iran Peace Deal: 14-Point Agreement Gives Iran $300 Billion Relief and Lifts Hormuz Blockade

Next Post
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! | US-Iran Peace Deal: 14-Point Agreement Gives Iran $300 Billion Relief and Lifts Hormuz Blockade

14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! | US-Iran Peace Deal: 14-Point Agreement Gives Iran $300 Billion Relief and Lifts Hormuz Blockade

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin