தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் மோடியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதற்காக அவர் இன்று முற்பகல் 10 மணிக்கு தனி வானூர்தி மூலம் டெல்லிக்குப் புறப்படவுள்ளார்.
கோரிக்கைகள் அடங்கிய மனு
அத்துடன், மத்திய அமைச்சர்களையும் முதலமைச்சர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் விஜய் அளிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மேகேதாட்டு விவகாரம், சென்னை மெட்ரோ திட்டம், பிஎம்ஸ்ரீ கல்வி நிதி உள்ளிட்ட தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய், பிரதமரிடம் வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த பயணத்தின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு விருந்தளிக்க சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

