• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மோசடிகளை தடுக்க வங்கிகளுக்கு தனித்துவமான போன் நம்பர்கள்… ஆர்பிஐ அதிரடி…!

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மோசடிகளை தடுக்க வங்கிகளுக்கு தனித்துவமான போன் நம்பர்கள்… ஆர்பிஐ அதிரடி…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 22, 2025 9:47 PM IST

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும் கூடிய விரைவில் தமக்கே உரிய தேசிய அழைப்பு எண்ணைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News18News18
News18

வங்கி சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகள் சில வருடங்களாகவே வேகமாக அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அரசு மற்றும் வங்கிகள் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இது தொடர்பான ஒரு முயற்சியாக, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும் கூடிய விரைவில் தமக்கே உரிய தேசிய அழைப்பு எண்ணைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளிடமிருந்து வரும் போன் கால்கள் மற்றும் மெசேஜ்களை எளிதாக அடையாளம் கண்டு, மோசடிகள் நடைபெறாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் ஒவ்வொரு வங்கிக்கும் ‘1600xx’ என்ற வரிசையில் ஆரம்பிக்கும் தனித்துவமான போன் நம்பர்களை அறிமுகப்படுத்துவதற்கான கோரிக்கையை வங்கிகள் முன்மொழிந்து உள்ளன. இந்த முயற்சி கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக தேசிய அழைப்பு எண்ணை வழங்கி, அந்த எண்களுக்கு இன்கமிங் வசதிகளையும் அனுமதிப்பதன் மூலமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை உறுதி செய்யலாம் என்று ஒரு வங்கி அதிகாரி கூறியுள்ளார். இது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஏற்கனவே அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஈடுபட்டுள்ளது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் கூடிய விரைவில் எடுக்கப்படும்.

ஜனவரியில் ஆணை வெளியிட்ட RBI:

தற்போது வங்கிகள் தங்களுடைய கஸ்டமர்களை அழைப்பதற்கு 1600xx என்ற வரிசை கொண்ட பல்வேறு போன் நம்பர்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும், கஸ்டமர்களால் மீண்டும் அந்த போன் நம்பர்களுக்கு அழைக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஜனவரி மாதத்தில் ஒரு ஆணையை பிறப்பித்தது. அதன்படி, வங்கிகள் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட போன் கால்களுக்கு ‘1600xx’ என்ற வரிசை நம்பரையும், விளம்பரம் சம்பந்தப்பட்ட போன் கால்களுக்கு ‘140xx’ என்ற வரிசை நம்பர்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது.

‘1600xx’ நம்பர்களில் இன்கமிங் கால் வசதி:

மேலும், அந்த வங்கி அதிகாரி கூறியபடி, ‘1600xx’ நம்பர்களில் இன்கமிங் கால் வசதிகளை பெறுவதற்கு வங்கிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கிகள் தங்களை தொடர்பு கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ள கஸ்டமர்களுக்கான விலக்குகளுக்கு டிமாண்ட் உள்ளது.

அது மட்டுமல்லாமல், கடன் சம்பந்தப்பட்ட போன் கால்களுக்கும் 1600xx வரிசை எண்களைப் பயன்படுத்துவதற்கான கோரிக்கையை விடுப்பதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் வங்கி அதிகாரி தெரிவித்தார். இந்த மாற்றம் மூலமாக கஸ்டமர்கள் மிக எளிதாக நம்பகமான போன் கால்கள் எது என்பதை அடையாளம் காண்பார்கள் மற்றும் ஆன்லைன் மோசடி சம்பந்தப்பட்ட வழக்குகள் குறைவதற்கும் இது உதவியாக இருக்கும்.

Read More

Previous Post

அன்ஷுல் கம்போஜை பாராட்டிய ஸ்டீஃபன் ஃப்ளெமிங்.. இங்கிலாந்து தொடரில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

Next Post

மாநில செலவினங்களை ஈடுகட்ட பினாங்கு நிலத்தை விற்காது – சோவ் – Malaysiakini

Next Post
மாநில செலவினங்களை ஈடுகட்ட பினாங்கு நிலத்தை விற்காது – சோவ் – Malaysiakini

மாநில செலவினங்களை ஈடுகட்ட பினாங்கு நிலத்தை விற்காது – சோவ் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin