Last Updated:
மேற்கு வங்க சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் மேற்பார்வைக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்களையும் கலந்து நியமிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்களை கலந்து நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த பணியில் மேற்பார்வையாளர்களாக மத்திய அரசு ஊழியர்களை மட்டும் தேர்தல் ஆணையம் நியமித்திருப்பதை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ஏற்கனவே ஒவ்வொரு மேசையிலும் ஒரு நுண் பார்வையாளராக மத்திய அரசு ஊழியரை தேர்தல் ஆணையம் நியமித்திருப்பதாக முறையிட்டார். தற்போது மேலும் ஒரு மத்திய பார்வையாளர் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அதற்குப் பதிலாக
மாநில அரசு ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் விதிமுறையை நீதிபதிகள் சுட்டிக்காட்டிய நிலையில், அதன்படியே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் மாநில ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு


