Last Updated:
மேற்கு வங்கம் தெற்கு 24 பர்கானஸ் ஃபால்டா தொகுதியில் வாக்கு முறைகேடு புகாரால் 285 வாக்குச்சாவடிகளில் மே 21 மறுவாக்குப்பதிவு, முடிவு மே 24 அன்று அறிவிப்பு
மேற்கு வங்கம் மாநிலத்தில் நேற்று 15 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது ஒரு தொகுதிக்கே மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில், 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது எழுந்த புகார்கள் காரணமாக தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த மறுவாக்குப்பதிவில் 90 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததால் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மறுதேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
May 03, 2026 11:26 AM IST
மேற்குவங்கத்தின் ஃபால்டா தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21ல் மறுவாக்குப்பதிவு : தேர்தல் ஆணையம்


