• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘மேக் இன் இந்தியா’ திட்டங்களில் இணைய ஸ்லோவாக்கியா நிறுவனங்களுக்கு முர்மு அழைப்பு | Droupadi Murmu invites Slovakia companies to join make in India projects

GenevaTimes by GenevaTimes
April 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
‘மேக் இன் இந்தியா’ திட்டங்களில் இணைய ஸ்லோவாக்கியா நிறுவனங்களுக்கு முர்மு அழைப்பு | Droupadi Murmu invites Slovakia companies to join make in India projects
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிராடிஸ்லாவா: ஸ்லோவாக்கியா நிறுவனங்கள் மேக் இன் இந்தியா திட்டங்களில் இணைய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு போர்ச்சுக்கல் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் ஸ்லோவாக்கியா சென்ற திரவுபதி முர்மு ஸ்லோவாக்கியா – இந்தியா வர்த்தக அமைப்பில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் வரலாற்று ரீதியாக நெருங்கிய நட்புறவைப் பகிர்ந்து கொண்டுள்ளன. பல ஆண்டுகளாக, நமது நாடுகள் பல்வேறு துறைகளில் ஒத்துழைத்துள்ளன. நமது வர்த்தகத் துறையின் பன்முகத்தன்மை குறித்து ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் உலகத் தலைமையாக உருவெடுத்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் நிதிசார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளோம்.

வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்லோவாக்கியா போன்ற நட்பு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து அந்த இலக்கை அடைவோம் என நாங்கள் நம்புகிறோம்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஐரோப்பாவில் வலுவான தொழில்துறை அடித்தளத்தை கொண்ட ஸ்லோவாக்கியா ஆழமான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினராகவும், வாகனம், பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப தொழில்களுக்கான மையமாகவும் ஸ்லோவாக்கியா உள்ளது.

அது இந்தியாவின் பரந்த நுகர்வோர் சந்தை, திறமையான பணியாளர்கள் மற்றும் செழிப்பான புத்தொழில் சூழல் ஆகியவற்றிலிருந்து பயனடைகிறது. இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களில் ஸ்லோவாக்கியா நிறுவனங்கள் இணைய வேண்டும். இவ்வாறு திரவுபதி முர்மு கூறினார்

ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினியுடன் பிராடிஸ்லாவாவில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் தொழிற்சாலைக்கு சென்று ஆலையின் உற்பத்தி வசதிகளை திரவுபதி முர்மு பார்வையிட்டார். ஸ்லோவாக்கியா குழந்தைகளின் ஓவியக் கண்காட்சியை குடியரசுத்தலைவர் பார்வையிட்டார்.

கவுரவ டாக்டர் பட்டம்: ஸ்லோவாக்கியாவின் நித்ரா நகரில் உள்ள ‘கான்ஸ்டன்டைன் தி ஃபிலாசபர் ’ பல்கலைக்கழகத்துக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு சென்றார். அங்கு அவருக்கு பொது சேவை மற்றும் நிர்வாகம், சமூக நீதி , கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட திரவுபதி முர்மு, தனது ஏற்புரையில், ‘‘இது ஒரு நாட்டிற்கும், நாகரீகத்திற்கும் அளிக்கப்படும் கௌரவம் என்றும், இது பழங்காலம் முதல் அமைதி மற்றும் கற்றலின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. தத்துவஞானி புனித கான்ஸ்டன்டைன் சிரில் பெயரிடப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து இந்த பட்டத்தைப் பெறுவது குறிப்பாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது’’ என்றார்.



Read More

Previous Post

யாழில் கோர விபத்து: பலி போன இரண்டு பிள்ளைகளின் தந்தையின் உயிர்

Next Post

வில்வித்தையில் சாதனை படைத்த காய்கறி வியாபாரியின் மகன் | Vegetable vendor s son sohit kumar achieves in archery

Next Post
வில்வித்தையில் சாதனை படைத்த காய்கறி வியாபாரியின் மகன் | Vegetable vendor s son sohit kumar achieves in archery

வில்வித்தையில் சாதனை படைத்த காய்கறி வியாபாரியின் மகன் | Vegetable vendor s son sohit kumar achieves in archery

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin