ஹோர்முஸ் நீரிணை தற்போது கப்பல் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அமெரிக்கக் கடற்படை அந்த நீர்வழியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
நீரினை வழியாக மேம்பட்ட எண்ணெய் போக்குவரத்தும், வளைகுடாவில் மாற்று ஏற்றுமதி வழிகளின் அதிகரித்த பயன்பாடும், அண்டை நாடுகளின் ஏற்றுமதிகளை சீர்குலைக்கும் ஈரானின் திறன், போரின் தொடக்கத்தில் இருந்ததைப் போல இப்போது இல்லை என்பதைக் இது காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மேற்கோள்கட்டி ஈரானிய ஊடகம் ஒன்று பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படை
‘நீர்வழிப்பாதை முழுமையாகத் திறக்கப்பட்டு அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெய் அதன் வழியாகச் செல்கிறது.
அதேவேளையில் அமெரிக்க முற்றுகையானது ஈரானியத் துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வணிகப் போக்குவரத்தைத் தடுக்கிறது” எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள், ஹோர்முஸ் வழியாகப் பயணத்தையும் இன்னமும் அபாயகரமானதாகவும் அதிக செலவு மிக்கதாகவும் மாற்றமுடியும் என்பதை ஈரான் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

