பங்குனி மாதம் என்றதும் நம் நினைவிற்கு வருவது முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம் தான். இது பங்குனி மாதத்தில் பௌர்ணமியுடன் சேர்ந்து வரக்கூடிய உத்திர நட்சத்திர நாளன்று வழிபாடு செய்வதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த முறை உத்திர நட்சத்திரம் இருக்கும் சமயத்தில் தான் பங்குனி மாதமே பிறக்கப் போகிறது. அதனால் அன்றைய தினத்தில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு அளவில்லாத நன்மைகள் உண்டாகும்.
முருகப்பெருமானே நம் வீடு தேடி வந்து நமக்கு அருளாசி புரிவதற்கு பங்குனி முதல் நாள் அன்று செய்யவேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகன் வீடு தேடி வர நமக்கு எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் நம்மை அறியாமல் நம்முடைய இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்து விடுவோம் அல்லது அம்மா அப்பா என்று நம்மை பெற்றவர்களை அழைப்பது உண்டு. அப்படி பலரும் தங்களுடைய இக்கட்டான சூழ்நிலையில் அழைக்கக்கூடிய ஒரு தெய்வமாக திகழக்கூடியவர்தான் முருகப்பெருமான். பலரது இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் திகழக்கூடியவராக இருக்கிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி மாதத்தின் முதல் நாள் அன்று நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் அவர் நம் வீடு தேடி வந்து நமக்கு அருள் புரிவார் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை பங்குனி மாதத்தின் முதல் நாள் மார்ச் மாதத்தின் 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரம் அல்லது 7:30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் அல்லது 10:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் அல்லது மாலை 5:30 மணியிலிருந்து 9:30 மணிக்குள் இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வழிபாடு செய்ய வேண்டும். முதலில் வீட்டில் முருகப்பெருமானின் சிலையோ வேலோ இருக்கும் பட்சத்தில் அதற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டில் முருகனின் சிலையும் இல்லை வேலும் இல்லை என்பவர்கள் முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக பால் பாயாசத்தை வைக்க வேண்டும். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் முருகப்பெருமானுக்கு பிடித்தமான சிவப்பு நிற மலர்களை பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு முருகப்பெருமானுக்குரிய திருமுருகாற்றுப் படையிலிருந்து ஒரு பாடலை 11 முறை பாட வேண்டும். இந்த பாடலின் பொருளே நமக்கு ஏற்படக்கூடிய கஷ்ட காலத்தில் நம்மை தேடி முருகப் பெருமான் வந்து காத்து ரசிக்க வேண்டும் என்பதுதான். அதனால் இந்த பாடலை நாம் பங்குனி முதல் நாள் அன்று வீட்டில் 11 முறை கூறுவதன் மூலம் முருகப்பெருமானே நம்மை பார்க்க ஓடோடி வந்து விடுவார் என்று கூறப்படுகிறது.
பாடல்
“அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்”