ஆனால், இந்த சந்திப்புக்கான பின்னணி குறித்து நடிகை ஷில்பா ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். அதாவது, 1991-ல் தனது ‘ஹம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் சச்சினை முதன்முதலில் சந்தித்ததாக கூறிய ஷில்பா, அந்த நேரத்தில் சச்சின் வசித்த அதே பகுதியில் தனது உறவினரும் வசித்து வந்ததாகவும், இருவரும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வந்ததாகவும், அப்படித்தான் டெண்டுல்கரை சந்தித்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.


