• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதா: மத்திய அரசால் எளிதில் நிறைவேற்ற முடியுமா? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தொகுதி மறுவரையறை மசோதா: மத்திய அரசால் எளிதில் நிறைவேற்ற முடியுமா? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி பெரும்பான்மையுடன் இருந்தாலும், தொகுதி மறுவரையறை, அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்றும் போது இந்திய அரசியலமைப்பின் 369வது பிரிவின் கீழ் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 சதவீத ஆதரவு அல்லது குறிப்பிட்ட அவையில் உள்ள 3ல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்

அதன்படி, மக்களவையில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற 364 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதேநேரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ள நிலையில், 71 ஆதரவு வாக்குகள் தேவைப்படுகின்றன. அதேபோல் மாநிலங்களவையில் மொத்தம் 164 ஆதரவு வாக்குகள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வசம் 141 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் அங்கும் 23 ஆதரவு வாக்குகளை திரட்ட வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.

அதேநேரம், மசோதா தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சிகள் திடீரென வெளிநடப்பு செய்தாலோ, அல்லது ஆதரவாக வாக்களித்தாலோ நிலைமை பாஜக வசம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கினால் தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது என எச்சரித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறைக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தொகுதி மறுவரையறை மற்றும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களுக்கு எதிராக வாக்களிக்க இந்திய கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்ததாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். அதேபோல், தொகுதி மறுவரையறைக்கும், மகளிர் இட ஒதுக்கீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தொகுதி மறுவரையறை மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை சரிசமமாக 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி மறுவரையறை செய்வதில் தற்போது உள்ள விகிதாச்சாரமே தொடரும் எனவும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், 2011 மக்கள் தொகையில் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மொத்த தொகுதிகள் 49ஆகவும் அல்லது மத்திய அரசு தரப்பு தகவல்படி விகிதாசார அடிப்படையில் 50 சதவீதம் உயர்த்தப்பட்டால் 59 தொகுதிகளாக அதிரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் 28 மக்களவை இடங்களை கொண்ட கர்நாடகாவில், 2011 மக்கள் தொகை அடிப்படையில் 33 இடங்களும், மத்திய அரசின் விகிதாசார அடிப்படையில் 41 தொகுதிகளாகவும் உயரக்கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவை பொறுத்தவரை 20 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 23 இடங்களாகவும், விகிதாச்சார அடிப்படையில் 30ஆகவும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதேபோல், மற்ற தென் மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தெலங்கானாவிலும் தொகுதிகளின் எண்ணிக்கை உயருமெனக் கூறப்படுகிறது.

Read More

Previous Post

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது – Sri Lanka Tamil News

Next Post

முதல் சந்திப்பு… தமிழ் பட நடிகையை காதலித்த சச்சின் டெண்டுல்கர்…? – 90களில் பேசப்பட்ட இந்த சம்பவம் தெரியுமா..? | Sachin Tendulkar | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
முதல் சந்திப்பு… தமிழ் பட நடிகையை காதலித்த சச்சின் டெண்டுல்கர்…? – 90களில் பேசப்பட்ட இந்த சம்பவம் தெரியுமா..? | Sachin Tendulkar | விளையாட்டு போட்டோகேலரி

முதல் சந்திப்பு... தமிழ் பட நடிகையை காதலித்த சச்சின் டெண்டுல்கர்...? - 90களில் பேசப்பட்ட இந்த சம்பவம் தெரியுமா..? | Sachin Tendulkar | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin