சென்னை, தமிழக முதல்-அமைச்சர் விஜய், சமூக வலைத்தளங்களிலும் புதிய சாதனை படைத்து வருகிறார். அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 50 லட்சத்தை (5 மில்லியன்) கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
4 லட்சமாக மட்டுமே இருந்தது
தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ முதல்-அமைச்சர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் 4 லட்சமாக மட்டுமே இருந்தது. அவர் பதவியேற்ற பிறகு இந்த எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து, தற்போது 5 மில்லியனை (50 லட்சம்) கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.



