• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முதலமைச்சர் விஜயின் வருகைக்காக… தயாராகும் கர்நாடக சட்டமன்ற வளாகம்…! | CM Vijay | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
முதலமைச்சர் விஜயின் வருகைக்காக… தயாராகும் கர்நாடக சட்டமன்ற வளாகம்…! | CM Vijay | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 31, 2026 6:33 AM IST

மேகதாது அணை விவகாரம்: முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல வாய்ப்பு. விதான் சவுதாவில் ஏற்பாடுகள் தீவிரம். டி.கே.சிவக்குமார் உறுதி. விசிக திருமாவளவன் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு வலியுறுத்தல்.

News18
News18

மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் செல்வதை அம்மாநில முதலமைச்சர் டிகே சிவக்குமார் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஞாயிறன்று கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் எனக் கூறினார். இதனிடையே, இனியும் கர்நாடக அரசு நியாயம் செய்யும் என நம்புவதற்கு இடமில்லை என தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டின் சார்பில் நியாயமான குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

மற்றொரு புறம், மேகதாது விவகாரத்தில் பேச்சு நடத்த வரும் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் விஜயின் வருகைக்காக கர்நாடக சட்டமன்ற வளாகமான விதான் சவுதாவை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு – கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அது குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, வரும் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், சந்திப்பு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தனக்கு கடிதம் எழுதியதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் இரு மாநில முதலமைச்சர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் விஜய் செல்லும் வழிகள் மற்றும் முதலமைச்சர்கள் சந்திக்கும் அறையை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், காவிரி ஆற்றுப்படுகைகள் மற்றும் அணைகளை முதலமைச்சர் விஜய் ஹெலிகாப்டரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் அதை ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், முதலமைச்சர் விஜயின் கர்நாடகப் பயணம் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் விஜயின் கர்நாடக பயணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார். நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பேட்டியளித்த அவர், ஒருதுளி கூட அரசியல் கலப்பு இன்றி தொல்லியல் ஆராய்ச்சி பணிகள் நடந்துவருவதாக கூறினார். வரும் காலங்களில் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

பணமோசடி குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் கைது! – Sri Lanka Tamil News

Next Post

இந்திய ஹாக்கி வீரர்களுக்கு காவி நிற உடை… பிரியங்கா காந்தி கண்டனம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
இந்திய ஹாக்கி வீரர்களுக்கு காவி நிற உடை… பிரியங்கா காந்தி கண்டனம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

இந்திய ஹாக்கி வீரர்களுக்கு காவி நிற உடை... பிரியங்கா காந்தி கண்டனம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin