Last Updated:
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக திறக்கப்பட்டதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தத்தின் எதிரொலியாக ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாகத் திறந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கூட்டாக தாக்குதல் நடத்தியதை அடுத்து, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க வேண்டுமென இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின.
டிரம்ப்
இதனிடையே, ஈரான் – அமெரிக்கா இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலான நிலையில், ஈரானுக்கு ஆதரவு அளித்த லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பத்து நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்த சூழலில், இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் வரை ஹோர்மூஸ் நீரிணை முழுவதுமாக திறக்கப்படுவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அபாஸ் அராக்சி அறிவித்துள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

