• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் 110 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை.. அப்போ பெட்ரோல், டீசல் விலை என்ன ஆகும்? | Brent Crude Crosses $110 Again: Will Petrol and Diesel Prices Rise in India?

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மீண்டும் 110 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை.. அப்போ பெட்ரோல், டீசல் விலை என்ன ஆகும்? | Brent Crude Crosses $110 Again: Will Petrol and Diesel Prices Rise in India?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீண்டும் 110 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை.. அப்போ பெட்ரோல், டீசல் விலை என்ன ஆகும்?

உலகளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர தொடங்கியுள்ளது. ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால் மே மாதத்திற்கு பின் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 3.7% உயர்ந்து ஒரு பீப்பாய் 110 டாலரை தொட்டது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை கச்சா எண்ணெய் விலை 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஈரான் போர் தான் இதற்கு முதன்மையான காரணம். மே மாதத்திற்கு பின் குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர தொடங்கி இருபது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் 110 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை.. அப்போ பெட்ரோல், டீசல் விலை என்ன ஆகும்?

ஈரானின் நிலவும் போர் குறிப்பாக டிரம்ப் பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுவதாக வெளியான தகவல் இதற்கு முக்கிய காரணம். அதே போல ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக சவுதி அரேபியா மீது நடத்தி வரும் தாக்குதல்கள், வளைகுடா பிராந்தியத்தில் இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தி, கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

ரஷ்யா மீதான உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் , குறிப்பாக ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதல் ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி மற்றும் விநியோகத்தை முடக்கியுள்ளன. மேலும், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே டீசல் விநியோகம் தொடர்பாக திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களை தடுக்க எதிர்க்கட்சியினர் திட்டமிடுவது ஆகியவையும் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு காரணம்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக சந்தையில் டீசல் மற்றும் பெட்ரோல் தொடர்பான futures ஒப்பந்தங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன. நியூயார்க்கில் டீசல் விலை கேலனுக்கு $4.90 ஆக நிலைபெற்றுள்ளது. இதுவரை இல்லாத மிக உயர்ந்த விலையில் எரிபொருள்கள் வர்த்தகமாகி வருகின்றன.

கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அவசரகால கையிருப்பில் இருந்து மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெயை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும், உலகளவில் தொடரும் போர்கள் மற்றும் விநியோக சங்கிலி தடையால் விலை ஏற்றத்தை தடுக்க முடியவில்லை.

கச்சா எண்ணெய் விலை உயர்வது இந்தியாவுக்கு கெட்ட செய்தி. ஏனெனில் இந்தியா மொத்தமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து தான் பெட்ரோல், டீசலாக மாற்றி பயன்படுத்துகிறது. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயரும். இது நேரடியாக பல்வேறு பொருட்களின் விலைவாசிகளை உயர்த்தும்.

Share This Article

English summary

Brent Crude Crosses $110 Again: Will Petrol and Diesel Prices Rise in India?

மீண்டும் 110 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை.. அப்போ பெட்ரோல், டீசல் விலை என்ன ஆகும்? / Brent crude touched $110 per barrel for the first time since May, rising about 3.7% amid Middle East supply fears, Houthi attacks, and disruptions linked to the Russia-Ukraine conflict.

Story first published: Saturday, October 17, 2026, 8:53 [IST]

Other articles published on Oct 17, 2026

Read More

Previous Post

பலாங்கொடை கஸ்ஸப தேரர்: சர்ச்சைகளும் வழக்குகள் நிறைந்த பின்னணியும்

Next Post

புகைமூட்டத்தைக் கையாள வர்த்தக செல்வாக்கைப் பயன்படுத்துங்கள் என பெர்சாமா தலைவர் அரசுக்கு அறிவுரை | Makkal Osai

Next Post
புகைமூட்டத்தைக் கையாள வர்த்தக செல்வாக்கைப் பயன்படுத்துங்கள் என பெர்சாமா தலைவர் அரசுக்கு அறிவுரை | Makkal Osai

புகைமூட்டத்தைக் கையாள வர்த்தக செல்வாக்கைப் பயன்படுத்துங்கள் என பெர்சாமா தலைவர் அரசுக்கு அறிவுரை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin