• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பலாங்கொடை கஸ்ஸப தேரர்: சர்ச்சைகளும் வழக்குகள் நிறைந்த பின்னணியும்

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பலாங்கொடை கஸ்ஸப தேரர்: சர்ச்சைகளும் வழக்குகள் நிறைந்த பின்னணியும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பிலுள்ள புத்தசாசன அமைச்சுக்கு அருகில் தங்கியிருக்கும் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மீண்டும் இலங்கையின் அரசியல் மற்றும் மத விவாதங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.



வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ‘சிவரத்துக்கு நீதி’ பாதயாத்திரையில் அவர் பங்கேற்றுள்ளார்.


மேலும், ஞானசார தேரருக்காக ஒரு இலட்சம் காவியுடைகளைப் புனித காணிக்கையாக வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.

நீதிமன்ற போராட்டங்களுக்கு தடை



கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் போராட்டங்களுக்குத் தடை விதித்திருந்த நிலையிலும், இரவு நேரத்திலும் அமைச்சுக்கு அருகில் தங்கியிருக்க அவர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாக்கிய புத்திர தேசிய அமைப்பு உள்ளிட்ட குழுக்களுடன் இணைந்து செயற்படும் பலாங்கொடை கஸ்ஸப தேரர், 2022ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் மூலம் சமூகத்தில் பரவலான கவனத்தைப் பெற்றார்.



‘கோட்டா கோ கம’ போராட்டப் பகுதியில், பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு அருகில் கூடாரம் அமைத்து அவர் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.


அந்தக் காலகட்டத்தில், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பான சர்ச்சையிலும் அவர் தலையிட்டார்.


பின்னர், அந்தப் போராட்டத்தில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்றும், கத்தோலிக்கத் திருச்சபைக்கு அதிக இடமளிக்கப்பட்டது என்றும் தெரிவித்து, போராட்டத்தை அவர் கடுமையாக விமர்சித்தார்.


சமூக ஊடகங்களில் அடிக்கடி பேசப்படும் இவரை, விமர்சகர்கள் இனவாதக் கருத்துகளைக் கொண்டவராகவும், காவியுடையை அணிந்த அரசியல்வாதியாகவும் வர்ணிக்கின்றனர்.

அதேவேளை, அவருடைய ஆதரவாளர்கள் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பவராக அவரைக் கருதுகின்றனர்.

சட்டச் சிக்கல்கள்

சில தென்னிலங்கை ஊடகங்கள் அவரது இயற்பெயர் முனீந்திரகே திலூக கசுன் குலரத்ன எனக் குறிப்பிட்டுள்ளன.


மேலும், 2009ஆம் ஆண்டு தனது தந்தையைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கொன்று இருந்ததாகவும் அந்த ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

காலிமுகத்திடல் போராட்டத்துக்குப் பின்னரான ஆண்டுகளில், கஸ்ஸப தேரர் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



2022 ஆகஸ்ட்: அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவித்தது.


2023 பெப்ரவரி: 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராகப் நாடாளுமன்ற  நுழைவுப் பாதையை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


2024 ஜூன்: முன்மொழியப்பட்ட மின்சாரச் சட்டத்துக்கு எதிராகப் பாராளுமன்றத்துக்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தயாரானபோது, தலங்கம காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.

கஸ்ஸப தேரர் எதிர்கொண்ட சட்டச் சிக்கல்களில் முக்கியமானதாகக் குறிப்பிடப்படுவது, 2025 நவம்பரில் திருகோணமலையில் இடம்பெற்ற புத்தர் சிலை விவகாரமாகும்.



திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரைக்கு அருகிலுள்ள கடற்கரைப் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.



கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த கட்டமைப்பை அகற்றுவதற்கு அதிகாரிகள் முயன்றபோது அங்கு பதற்றமான சூழல் உருவானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பலாங்கொடை கஸ்ஸப தேரர் 


இந்தச் சம்பவம் தொடர்பாக 2026 ஜனவரி 14ஆம் திகதி, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.



சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்றமை, கடற்கரைப் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியற்ற கட்டுமானம் மேற்கொண்டமை மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


விளக்கமறியலில் இருந்தபோது கஸ்ஸப தேரர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும் ஆரம்பித்தார். பின்னர், தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் தலையிட்டதைத் தொடர்ந்து அந்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

உடல்நலக் குறைவு காரணமாக அவர் திருகோணமலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


விளக்கமறியல் உத்தரவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

இறுதியாக, 2026 பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. மத அல்லது பொதுச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின் கீழ் இந்தப் பிணை வழங்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் இருந்து ஆரம்பித்த கஸ்ஸப தேரரின் பொதுச் செயற்பாடுகள், பின்னர் விளக்கமறியல், வைத்தியசாலை அனுமதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான வீதிப் போராட்டங்கள் எனப் பல்வேறு கட்டங்களைக் கடந்துள்ளன.


தற்போது, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கைகள், இலங்கையில் மதம், அரசியல் மற்றும் சட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான சிக்கலான உறவையும் விவாதங்களையும் மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளன.

தேரர் தொடர்பான வழக்குகள்

2009 செப்டெம்பர் 7 தந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததாக ஊடக அறிக்கைகள் வெளியாகின. 


2022 ஆகஸ்ட் 24 அலரிமாளிகைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.


2022 ஆகஸ்ட் 26 கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2023 பெப்ரவரி 8 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


2024 ஜூன் 6 முன்மொழியப்பட்ட மின்சாரச் சட்டத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தயாரானபோது தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

2025 நவம்பர் 16 திருகோணமலை கடற்கரைப் பாதுகாப்பு வலயத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டமை மற்றும் அனுமதியற்ற கட்டுமானம் தொடர்பான சர்ச்சை உருவானது.


2026 ஜனவரி 14 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

2026 ஜனவரி 28 வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


2026 பெப்ரவரி 3 விளக்கமறியல் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

2026 பெப்ரவரி 11 திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

2026 ஜூன் 5 நாவற்குழி சம்பவம் தொடர்பான கருத்துகள் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவைச் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நிராகரித்ததாக வழங்கப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 ஒக்டோபர் 16 ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில், ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருப்பதற்குத் தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஜோகூர் பாருவில் மின்வெட்டை ஏற்படுத்திய துணை மின்நிலையத் தீ விபத்தில் இரண்டு TNB ஊழியர்கள் காயம் | Makkal Osai

Next Post

மீண்டும் 110 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை.. அப்போ பெட்ரோல், டீசல் விலை என்ன ஆகும்? | Brent Crude Crosses $110 Again: Will Petrol and Diesel Prices Rise in India?

Next Post
மீண்டும் 110 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை.. அப்போ பெட்ரோல், டீசல் விலை என்ன ஆகும்? | Brent Crude Crosses $110 Again: Will Petrol and Diesel Prices Rise in India?

மீண்டும் 110 டாலரை கடந்த கச்சா எண்ணெய் விலை.. அப்போ பெட்ரோல், டீசல் விலை என்ன ஆகும்? | Brent Crude Crosses $110 Again: Will Petrol and Diesel Prices Rise in India?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin