• Login
Saturday, June 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் முரண்டு பிடிக்கும் ஈரான்.. டிரம்ப் செய்த தவறு.. இஸ்ரேல் பக்கம் சாய்கிறதா அமெரிக்கா? | Iran Considers Canceling Switzerland Peace Talks After US Strike on Sirik; Oil Prices Set to Rise Again

GenevaTimes by GenevaTimes
June 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மீண்டும் முரண்டு பிடிக்கும் ஈரான்.. டிரம்ப் செய்த தவறு.. இஸ்ரேல் பக்கம் சாய்கிறதா அமெரிக்கா? | Iran Considers Canceling Switzerland Peace Talks After US Strike on Sirik; Oil Prices Set to Rise Again
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீண்டும் முரண்டு பிடிக்கும் ஈரான்.. டிரம்ப் செய்த தவறு.. இஸ்ரேல் பக்கம் சாய்கிறதா அமெரிக்கா?

ஈரான், சுவிட்சர்லாந்தில் வரும் ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறவிருந்த போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முழுமையாக ரத்து செய்யும் முடிவை பரிசீலித்து வருகிறது. அமெரிக்கா நேற்று தென் ஈரானின் சிரிக் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையல் இந்த முடிவை எடுக்கப்பட உள்ளதாக ஈரான் பேச்சுவார்த்தை குழு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகளை ஈரான் முழுமையாக நிறுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற இருந்தது. அமெரிக்காவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஈரான் இந்த பேச்சுவார்த்தையை தொடர விரும்பவில்லை என்று அதன் பேச்சுவார்த்தை குழு தெரிவித்துள்ளது.

மீண்டும் முரண்டு பிடிக்கும் ஈரான்.. டிரம்ப் செய்த தவறு.. இஸ்ரேல் பக்கம் சாய்கிறதா அமெரிக்கா?

ஈரான் குழுவில் இருக்கும் முக்கிய தலைவர்கள், இந்த தாக்குதல் நடவடிக்கையை MoU-வின் முதல் பிரிவை மீறிய செயலாக கருதுகின்றனர். இதற்கு பதிலடியாக, மீதமுள்ள 60 நாள் காலக்கெடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

48 மணிநேர தாக்குதல்

நேற்று சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்குப் பதிலடியாக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள சிரிக் துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு மையங்கள், கடலோர ரேடார் நிலையங்கள் ஆகியவற்றை அமெரிக்க போர் விமானங்கள் குறிவைத்து தாக்கியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு சில மணி நேரங்களிலேயே ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) பதிலடி தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. அரசு செய்தி நிறுவனமான IRNA வெளியிட்ட தகவலின்படி, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் பேச்சைக் கேட்டு டிரம்ப் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்த திட்டமிட்டே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கருத்து பரவி வருகிறது.

இந்த நிலையில் தான் ஈரான் பேச்சுவார்த்தை குழு, 60 நாள் கூட்டத்தில் ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் திட்டமிடப்பட்டு இருந்த முக்கிய கூட்டத்தை ரத்து செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர துவங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Share This Article

English summary

Iran Considers Canceling Switzerland Peace Talks After US Strike on Sirik; Oil Prices Set to Rise Again

Iran is weighing the cancellation of crucial technical talks scheduled in Switzerland on June 28-29, following the US military strike on Sirik in southern Iran. The move comes amid escalating tensions, with Iran accusing the US of violating a prior agreement and retaliatory strikes already reported by IRGC.

Story first published: Saturday, June 27, 2026, 19:33 [IST]

Other articles published on Jun 27, 2026

Read More

Previous Post

கல்பாக்கம் அணுமின் திட்டத்தில் புதிய முன்னேற்றம்… டர்பைன் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த டாக்டர் ஏ.கே. மொஹந்தி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பட்ஜெட் தாக்கல் தொடர்பாக 2-ந்தேதி முதல் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை … | Makkal Osai

Next Post
பட்ஜெட் தாக்கல் தொடர்பாக 2-ந்தேதி முதல் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை … | Makkal Osai

பட்ஜெட் தாக்கல் தொடர்பாக 2-ந்தேதி முதல் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin