Last Updated:
முன்மாதிரி அதி வேக ஈனுலையை மின் தொகுப்புடன் இணைப்பதற்கு முன்னதாக நிறைவு செய்யப்பட வேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று டர்பைன் ஜெனரேட்டர் அமைப்பைச் சீரமைப்பதாகும்.
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தித் துறையின் செயலாளருமான டாக்டர் ஏ. கே. மொஹந்தி, கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி அதி வேக ஈனுலையின் முக்கிய தொழில்நுட்ப மைல்கற்களை ஆய்வு செய்வதற்காக நேற்று (26.06.2026) அங்கு வருகை தந்தார்.
பாரதிய நப்கிய வித்யுத் நிகம் லிமிடெட் (பாவினி – BHAVINI) நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பி. ஏ. சுரேஷ் பாபு, பிற மூத்த அதிகாரிகளுடனும் இணைந்து டாக்டர் மொஹந்தி ஆலையின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்தார். இந்த ஆய்வானது, தற்போது நடைபெற்று வரும் குறைந்த-திறன் சோதனைகள், டர்பைன் ஜெனரேட்டர் அமைப்பை முழுமையாகப் பராமரித்துச் சீரமைக்கும் பணிகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதாக அமைந்தது. டர்பைன் ஜெனரேட்டர் சீரமைப்புப் பணியானது, அதன் அசல் உபகரண உற்பத்தியாளரான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வருகையின் போது, அணுசக்தி ஆணையத் தலைவர், பிஹெச்இஎல் பொறியியல் குழுவினருடனும் விரிவாகக் கலந்துரையாடினார்.
முன்மாதிரி அதி வேக ஈனுலையை மின் தொகுப்புடன் இணைப்பதற்கு முன்னதாக நிறைவு செய்யப்பட வேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று டர்பைன் ஜெனரேட்டர் அமைப்பைச் சீரமைப்பதாகும்.
ஏப்ரல் 6, 2026 அன்று முன்மாதிரி அதி வேக ஈனுலையில் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முதல் கிரிட்டிக்காலிட்டி’ நிலையைத் தொடர்ந்து இந்த வருகை அமைந்துள்ளது. அணுசக்தித் துறையின் (DAE) கீழ் செயல்படும் இந்திய அரசின் முதன்மை நிறுவனமான பாவினி, இந்தியாவின் முன்மாதிரி அதி வேக ஈனுலையை அமைத்து இயக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.அதிவேக ஈனுலைத் தொழில்நுட்பம் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
கல்பாக்கம் அணுமின் திட்டத்தில் புதிய முன்னேற்றம்… டர்பைன் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த டாக்டர் ஏ.கே. மொஹந்தி


