• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது டெலிகிராம் செயலி..!! நீட் தேர்வுக்காக விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!! | Telegram Returns to Google Play Store in India After Temporary NEET-UG Re-Exam Block

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது டெலிகிராம் செயலி..!! நீட் தேர்வுக்காக விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!! | Telegram Returns to Google Play Store in India After Temporary NEET-UG Re-Exam Block
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது டெலிகிராம் செயலி..!! நீட் தேர்வுக்காக விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!!

இந்தியாவில் முன்பெல்லாம் 12ஆம் வகுப்பு தேர்வில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தான் மருத்துவ படிப்புகளுக்கு சீட் கிடைக்கும். இந்நிலையில் தான் 2013ஆம் ஆண்டில் நீட் நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட இளநிலை மருத்துவ படிப்புகளில் சோ்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம்.

நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு அதன் தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்கும். இந்த நீட் நுழைவு தேர்வில் பல கெடுபிடிகள் கடைபிடிக்கப்படும். மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட ஆடை அணிந்து தான் வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் உண்டு. தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படும் போதும் முழுமையாக பரிசோதனைக்கு ஆளாவார்கள்.

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது டெலிகிராம் செயலி..!! நீட் தேர்வுக்காக விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!!

மாணவர்களிடம் இத்தனை கெடுபிடிகள் நடந்தாலும் நீட் தேர்வு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த ஆண்டுக்கான நீட் தோ்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் முன் கூட்டியே நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

தேர்வு ரத்தானதை அடுத்து ஜூன் 21ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் மறு தேர்வு வினாத்தாளும் டெலிகிராமில் பரவியதாக தகவல் வெளியானது. ஆனால் அது போலியான செய்தி என நீட் தேர்வினை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. பெற்றோரிடம் நீட் மறு தேர்வு வினாத்தாள் என கூறி டெலிகிராமில் சில வினாத்தாளை அனுப்பி மோசடியாளர்கள் பணம் பறிக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்கியது. ஜூன் 21 ஆம் தேதி நடக்கும் நீட் மறுதேர்வில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல், பாதுகாப்பாக நடத்துவதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை என அறிவித்தது. ஜூன் 22 வரை டெலிகிராம் செயலி இயங்காது என கூறியது. இதற்கு எதிராக டெலிகிராம் தொடர்ந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போது நீட் மறுதேர்வு முடிந்த நிலையில், இந்தியாவில் ‘டெலிகிராம்’ செயலிக்கான தடை நீக்கப்பட்டு, செயலி மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. டெலிகிராம் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. பயனர்கள் இப்போது வழக்கம் போல் செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயனர்கள் டெலிகிராம் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆப்பிள் ஐபோன் பயனர்களும் ஆப்பிள் ஸ்டோரில் டெலிகிராமை பதிவிறக்கி பயன்படுத்தலாம்.

Share This Article

English summary

Telegram Returns to Google Play Store in India After Temporary NEET-UG Re-Exam Block

Telegram has reappeared on the Google Play Store in India after a short nationwide block linked to the NEET-UG re-exam, bringing the app back for Android users as the restriction period ended.

Story first published: Tuesday, June 23, 2026, 11:33 [IST]

Other articles published on Jun 23, 2026

Read More

Previous Post

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்காமல்.. பிரச்சார தொனியில் சட்டசபையில் பேசிய விஜய்.. கவனிச்சீங்களா? | CM Vijay spoke like a election canvass in his speech inside the assembly

Next Post

Amaran ribut petir, hujan lebat di 7 negeri | Makkal Osai

Next Post
Amaran ribut petir, hujan lebat di 7 negeri | Makkal Osai

Amaran ribut petir, hujan lebat di 7 negeri | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin