• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மீண்டும் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 08, 2025 4:39 PM IST

மக்கள் தொகையை தொடர்ந்து, தற்போது வைர சந்தையிலும் இந்தியா, சீனாவை பின்னுக்கு தள்ளியது. இதுகுறித்த விரிவான தவலை இங்கே பார்ப்போம்.

News18News18
News18

முன்னதாக, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, சீனாவை முந்திச் சென்ற நிலையில், தற்போது மற்றொரு பிரிவிலும் சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. அதாவது, உலக வைர சந்தையில் சீனாவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம், உலகின் இரண்டாவது பெரிய வைர சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் இரண்டாவது பெரிய வைர சந்தையாக இந்தியா, சீனாவை பின்னுக்கு தள்ளியது என்று டி பீர்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி, அல் குக் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார். இந்த மாற்றத்திற்கு அதாவது, இந்தியாவின் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சிக்கு பாராட்டு தெரிவித்த குக், சீனாவில் வைரத்தின் குறைந்து வரும் தேவைக்கிடையே, இந்தியாவின் இந்த முன்னேற்றம் முற்றிலும் மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

வைர சந்தையில், சீனாவின் சரிவுக்கான காரணங்கள் குறித்து அவர் பேசுகையில், “சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஓரளவு சரிந்துள்ளதால், சீனாவில் ஆடம்பரத் துறை முழுவதுமே சரிவை சந்தித்துள்ளது, அதன் காரணமாகவே வைரத்தின் தேவையும் குறைந்துள்ளது. எனவே, இதனை நாங்கள் ஒரு நீண்ட காலப் பிரச்சனையாகப் பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

சீன சந்தை, விரைவில் நிலையான வளர்ச்சியுடன் சீராகும் என்று தான் நம்புவதாக கூறிய குக், தற்போதைய சூழ்நிலையிலிருந்து சீனா மீண்டு வருவதற்கு, ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் எடுக்கும் என்றும் தெரிவித்ததார். “இந்த விஷயத்தில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது, சீனாவின் தேவையை நிலைப்படுத்துவதாகும், அதுதான் தற்போது நடந்து வருகிறது. ஆனால் நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், சீனாவின் தேவை மற்றும் மறுவளர்ச்சி என்பது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்பதை எங்களால் கணிக்க முடிகிறது.” என்று குக் மேலும் கூறினார்.

சமீபத்திய ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்கா மற்றும் சீனாவில் வைரத்தின் தேவை குறைந்து வருவதால், இந்தியாவில் வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் உள்நாட்டு வைர இருப்பு உயர்ந்துள்ளது, இது உலக வைர சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள முக்கிய காரணமாகி உள்ளது.

அமெரிக்காவில் ஆய்வகங்களில் வளர்க்கப்படும் வைரங்கள், இயற்கை வைரங்களின் தேவையை கணிசமாக பாதித்துள்ளதாகவும் குக் தெரிவித்துள்ளார். மேலும், இயற்கை வைரங்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நாம், இயற்கை வைரங்களின் கதை மற்றும் மவுசை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்தார்.

உலக வைரச் சந்தையில் அமெரிக்கா தற்போது முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

February 08, 2025 4:39 PM IST

Read More

Previous Post

Delhi Election 2025 | தோற்றார் கெஜ்ரிவால்.. வென்றார் அதிஷி.. 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் மலர்ந்தது தாமரை!

Next Post

ஒரு வருடமாக திரையில் தோன்றாதது பற்றி மனம் திறந்த மிருணாள் தாகூர் | Makkal Osai

Next Post
ஒரு வருடமாக திரையில் தோன்றாதது பற்றி மனம் திறந்த மிருணாள் தாகூர் | Makkal Osai

ஒரு வருடமாக திரையில் தோன்றாதது பற்றி மனம் திறந்த மிருணாள் தாகூர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin