• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மீண்டும் கைவிடப்பட்டுள்ளது யாழ். நெடுந்தூர பேருந்து நிலையம்

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மீண்டும் கைவிடப்பட்டுள்ளது யாழ். நெடுந்தூர பேருந்து நிலையம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நீண்ட கால இழுபறிக்கு பின்னர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ்ப்பாணம்
வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் கடந்த
செவ்வாய்க்கிழமை நான்காவது தடவையாக “கோலாகலமாக” ஆரம்பித்து வைக்கப்பட்டது.


பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போது , தனியார்
பேருந்து சங்கத்தினர் மாத்திரமே அங்கிருந்து தமது சேவைகளை ஆரம்பித்தனர்.


இலங்கை போக்குவரத்து சபையினர் , “எமக்கு என்று ஒரு பேருந்து நிலையம் இருக்கும்
போது , நாம் வேறு எங்கிருந்தும் சேவைகளை ஆரம்பிக்க மாட்டோம்” என கூறி புதிய
பேருந்து நிலையத்திற்கு வருகை தரவில்லை.


அந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்காத இ.போ.ச
வினருக்கு எதிராக வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் பணிப்பில், வடக்கு மாகாண
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் , யாழ்ப்பாண தலைமை காவல்துறை நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையே முறைப்பாடு செய்தனர்.


முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த, காவல்துறை இ.போ.ச வின்
யாழ்ப்பாண சாலை முகாமையாளரை அழைத்து வாக்கு மூலம் பெற்ற போதும்”
எமக்கான பேருந்து நிலையம் இருக்கும் போது, நாம் வேறு இடங்களில் இருந்து
சேவைகளை முன்னெடுக்க மாட்டோம்” என உறுதியாக கூறி இருந்தார்.



அந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை இ.போ.சவினர்
ஆரம்பிக்காது விடின் நாமும் முன்னர் சேவைகளை ஆரம்பித்த பழைய இடத்திற்கே
மீண்டும் செல்வோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறி வந்த நிலையில் ,
கடந்த 06 நாட்கள் அவகாசம் கொடுத்தும், இ.போ.ச வினரை புதிய பேருந்து
நிலையத்திற்கு அழைக்க முடியாததால், தாம் பழைய இடத்திற்கே செல்வதாக கூறி
இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்து சங்கத்தினரும் , இ.போ..ச
பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளனர்.


புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்துகள் விலகி சென்றமையால் ,
பேருந்து நிலையம் மீண்டும் வெறிச்சோடி காணப்படுகிறது.



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்
முகமாக , யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டம் மற்றும்
வெளிமாகாணங்களுக்கு புறப்படும் பேருந்துகள், நகருக்கு வெளியே இருந்து சேவையை
தொடங்கும் முகமாக யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திற்காக 2017ஆம்
ஆண்டு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு , 2021ஆம் ஆண்டு அதன் கட்டுமான பணிகள்
நிறைவு பெற்றன.



அதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு அப்பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை
ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுத்த போதும் , இலங்கை போக்குவரத்து சபையின்
ஒத்துழைப்பின்றி , அங்கிருந்து சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலைமை
காணப்படுகிறது.


இம்முறை நான்காவது தடவையாக பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை “கோலாகலமாக”
ஆரம்பித்து வைத்த நிலையில் , 06 நாட்களில் மீண்டும் பேருந்து நிலையம்
கைவிடப்பட்டு , மீண்டும் வெறிசோடி காணப்படுகிறது.

GalleryGallery

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

செபி அறிவிப்பால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. LTCG வரி ரத்து? நாளைக்கு இருக்கு கச்சேரி ஆரம்பம்..! | Big LTCG Tax Relief Ahead? SEBI Recommends Scrapping Capital Gains Tax for Foreign Investors & Mutual Fund Reinvestments

Next Post

நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் | Is TASMAC moving towards privatization: A point raised by Minister Vignesh

Next Post
நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் | Is TASMAC moving towards privatization: A point raised by Minister Vignesh

நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் | Is TASMAC moving towards privatization: A point raised by Minister Vignesh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin