• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் | Is TASMAC moving towards privatization: A point raised by Minister Vignesh

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் | Is TASMAC moving towards privatization: A point raised by Minister Vignesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Velmurugan P

Time
Updated: Monday, November 2, 2026, 16:46 [IST]

சென்னை: டாஸ்மாக்கில் கடந்த 4 மாதங்களாகவே குடிமகன்களுக்கு பிடித்த நல்ல மதுபானங்கள் விற்கப்படுவது இல்லை என்றும், விற்கப்படும மதுபானங்களும் எம்ஆர்பி விலையில் விற்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இந்த சூழலில் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் எஆர்பியுடன் அந்த கட்டணத்தை இணைக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த சூழலில் மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிராக கடையை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் அரசு, டாஸ்மாக்கை தனியார் மயமாக்குவது குறித்து யோசிக்காமல் இல்லை என்று அமைச்சர் விக்னேஷ் பேட்டியின் போது கூறினார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு என்ன தான் சம்பளத்தை உயர்த்தி அரசு அறிவித்தாலும், எம்ஆர்பியை விட கூடுதல் தொகை வாங்குவதை பல கடை ஊழியர்கள் நிறுத்தவே இல்லை என்று குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. எம்ஆர்பியை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து, பாட்டிலை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது.ஆனால் டாஸ்மாக் ஊழியர்கள் எம்ஆர்பியைவிட 20 ரூபாய் அதிகம் வசூலிக்கிறார்கள். அதில் பாட்டிலை கொடுத்தால் 10 ரூபாயை திரும்ப ஒப்படைக்கிறார்கள்.

Is TASMAC moving towards privatization A point raised by Minister Vignesh

இந்த சூழலில் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் எஆர்பியுடன் அதனை அரசு சேர்த்துள்ளது. நவம்பர் 1ம் தேதியான நேற்று முதல் எம்ஆர்பி விலையில் தான் மதுபானங்களை விற்க வேண்டும். கூடுதல் தொகைக்கு விற்கக்கூடாது. மதுபாட்டில்களை திரும்ப ஒபபடைத்தால் அதில் 10 ரூபாயை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பாட்டிலை திரும்ப பெறும் நடைமுறைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடையை மூடிய டாஸ்மாக் ஊழியர்களை பணி நீக்கம் செய்யுங்க.. தவெக ஆதரவாளர்கள் போட்ட லிஸ்ட்

கடையை மூடிய டாஸ்மாக் ஊழியர்களை பணி நீக்கம் செய்யுங்க.. தவெக ஆதரவாளர்கள் போட்ட லிஸ்ட்

50 சதவீதம் திரும்ப தருகிறார்கள்

ஆனால் கடந்த 6 மாதத்தில் 5 முறை டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். டாஸ்மாக்கில் விற்பனையாகும் பாட்டில்களில் 50 சதவீதம் மட்டும் தான் திரும்பு பெறப்படுகிறது. ஆனால், கடந்த ஆட்சியில் 99 சதவீதம் பாட்டில்கள் திரும்பப் பெறப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.

பார்ட்டி பண்ட்

பார்ட்டி பண்டை விட அதிக தொகை இதில் சென்றுள்ளது. இந்த பாட்டில் விவகாரத்தில் பெரிய ‘லாபி’ இருக்கின்றது. தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இந்த பாட்டில் முறைகேடுதான். டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களைத் திரும்பப் பெற இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. 4,800 டாஸ்மாக் கடைகளின் முன்பும் பாட்டில்களைத் திரும்பப் பெற இயந்திரங்கள் வைக்கப்பட இருக்கிறது. அப்போது இந்தப் பிரச்சினைகள் குறையும்.

அமேசான் பிரைம் வெச்சி இருக்குறவங்க எல்லாருமே பாவம்தான்.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்

அமேசான் பிரைம் வெச்சி இருக்குறவங்க எல்லாருமே பாவம்தான்.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்

சம்பளம் அதிகரிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 14,000 ஆக இருந்த ஊதியத்தை ரூ. 33,000 ஆக உயர்த்தியிருக்கிறோம். வார விடுமுறை, மாதத்தில் 2 நாள் விடுமுறை, சீருடை, பண்டிகைக் கால முன்பணம், மருத்துவக் காப்பீடு எனப் பல நன்மைகளைச் செய்துள்ளோம். நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதனால் 10 லட்சம் பேர் ரூ. 150-ஐச் செலவு செய்யாமல் வீட்டில் கொடுத்திருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

எம்ஆர்பிக்கு மேல் வசூலிக்கக்கூடாது

பாட்டிலைத் திரும்பப் பெற வாங்கப்படும் ரூ. 10 இனி எம்.ஆர்.பி. (MRP) விலையிலேயே சேர்க்கப்படும். இனி அந்தத் தொகை மட்டும்தான் கண்டிப்பாக வசூலிக்கப்படும். டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். டாஸ்மாக் ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். இந்த விவகாரத்தில் ஒரு பெரிய குழு பின்னணியில் செயல்படுகிறது. அந்த குழு தான் டாஸ்மாக் ஊழியர்களை மூளைச்சலவை செய்து போராடத் தூண்டுகிறது. டாஸ்மாக் கடையைத் திறக்காமல் இருக்கும் ஊழியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை நிச்சயமாகப் பாயும்.

நோட்டீஸ் தந்துள்ளோம்

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 960 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடைகளைப் பூட்ட மற்றவர்களை வற்புறுத்திய 4 பேர் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளனர். மேலும், டாஸ்மாக்கிற்குக் கூடுதலாகத் தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படவில்லை என்றால், மாற்றுப் பணியாளர்களை வைத்து கடைகளைத் திறப்போம். பார் டெண்டர் வெளியிட்டவுடன், எங்கெல்லாம் பார்கள் இருக்கின்றன என்ற பட்டியல் வெளியிட உள்ளோம்” என்றார்.

தனியார் மயம்

அப்போது இவ்வளவு பிரச்சனைக்கு பேசாமல் டாஸ்மாக்கை தனியார் மயம் ஆக்கலாமே என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விக்னேஷ், நாங்கள் தனியாருக்கு மதுக்கடைகளைக் கொடுப்பது குறித்தும் ஆலோசிக்காமல் இல்லை.. அதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை, அதையும் பரிசீலித்து வருகின்றோம். ஆனால் தனியார் மயம் ஆக்குவதிலும் சிக்கல் இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏன் தனியாரிடம் இருந்த மதுக்கடைகளை அரசுடைமையாக்கினார் என்ற சூழலையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

சிண்டிகேட் அமைப்பார்கள்

மதுக்கடைகள் தனிநபர் கையில் சிக்கிவிடும். அரசு டெண்டர் வெளியிட்டால் 4லட்சம் ஒப்பந்தம் என்றால், 2 லட்சம் தான் என்று சிண்டிகேட் அமைத்து விடுவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.எனவே தற்போதைய பிரச்சனைக்கு தனியார்மயமாக்கல் மட்டுமே தீர்வு ஆகிவிடாது. மதுக்கடை விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். தீபாவளிக்கு விற்பனை இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.” இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் கூறினார்.

நல்ல சரக்கு கிடைப்பது இல்லை

இந்த பிரச்சனை ஒருபுறம் எனில், டாஸ்மாக்கில் கடந்த 4 மாதங்களாகவே மக்கள் அதிகம் விரும்பும் சில நடுத்தர ரக மதுபானங்கள் சென்னை புறநகர் பகுதிகளில் விற்கப்படுவது இல்லை. குடிமகன்களுக்கு பிடிக்காத சரக்குகளே அதிகம் தலையில் கட்டப்படுவதாக கூறப்படுகிறது.இதுபற்றி டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறும் போது, தமிழ்நாடு முழுவதுமே நன்றாக விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் ஒரு கேஸ் தான், மதுப்பிரியர்களுக்கு பிடித்த மதுபானங்கள் வருகிறது . அது உடனே தீர்ந்து விடுகிறது. அதனை கேட்டாலும் டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் தருவது இல்லை. அவர்கள் தருவதை தான் விற்கிறோம். அதேநேரம் எங்கு எல்லாம் மதுபானங்கள் அதிகம் விற்பனையாகாத பகுதிகளோ, அங்கு எல்லாம் குடிமகன்கள் விரும்பி பருகும் மதுபானங்கள் விற்கப்படுகிறது” என்றார்.

English summary

There is growing criticism that, for the past four months, TASMAC outlets have failed to stock the popular liquor brands preferred by consumers, and that the products currently available are not being sold at the Maximum Retail Price (MRP). Against this backdrop, Minister Vignesh stated in an interview that the government is indeed considering the possibility of privatizing TASMAC.

Read More

Previous Post

மீண்டும் கைவிடப்பட்டுள்ளது யாழ். நெடுந்தூர பேருந்து நிலையம்

Next Post

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் தயாரிப்பு தீவிரம்! | வணிகச் செய்திகள்

Next Post
நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் தயாரிப்பு தீவிரம்! | வணிகச் செய்திகள்

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் தயாரிப்பு தீவிரம்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin