அநுராதபுரம் மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கட்டில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று, 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக நேற்று வெள்ளிக்கிழமை (04.09.2026) காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து மிஹிந்தலை காவல் நிலைய உத்தியோகத்தர் குழுவொன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்த பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட பொதி
கண்டெடுக்கப்பட்ட பொதியிலிருந்து, T56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அப் பகுதிக்குக் கொண்டு வந்து போட்ட நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும், சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

