நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் அமைந்துள்ள இலொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான 5-வது விக்டர் கூடைப்பந்து போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. பெண்களுக்கான முதல் விக்டர் கூடைப்பந்து போட்டியினை கல்லூரி முதல்வர் திருமதி.ஜோஸ்மின் டைய்சி அவர்கள் தொடங்கி வைத்தார் .
பின்னர் நடைபெற்ற ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியினை கல்லூரியின் செயலர் முனைவர் டேனிஷ் பொன்னையா சே.ச. அவர்கள் துவக்கி வைத்தார் . நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை முனைவர் ஜோ.அருண் சே.ச கலந்து கொண்டனர்மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 22 அணிகளும், பெண்கள் பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான இறுதிச்சுற்றில் சென்னை லயோலா கல்லூரி அணி முதலிடத்தை பிடித்து பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான கோப்பையை பெற்று வெற்றி பெற்றது. இரண்டாவது பரிசை சென்னை கிறிஸ்டியன் கல்லூரி அணி தட்டிச் சென்றது. பெண்களுக்கான இறுதி சுற்று போட்டியில் கோவை பிஎஸ்ஜி அணி முதலிடத்தை பிடித்து பத்தாயிரம் மதிப்பிலான கோப்பையை வென்றது . இரண்டாவது பரிசை சென்னை ஜேஐடி அணி வென்றது. முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை தட்டிச்சென்ற அணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கோப்பைகளும் சான்றிதழும் வழங்க பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
