நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 75,000 மருத்துவ இடங்கள் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிகாரின் தர்பாங்காவில் நடந்த நிகழ்ச்சியில் 12 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை
பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, இந்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.
பிகாரின் முசாபர்பூரில் புற்றுநோய் மருத்துவமனை திறக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்தை விட்டு வெளியே செல்லவேண்டிய அவசியம் இருக்காது என்றும் மோடி கூறினார். நாடு முழுவதும் தற்போது 24 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்… விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு!
பிகாரின் கோசி ,மிதிலா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை தீர்க்க இந்தாண்டு பட்ஜெட்டில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக என்றார். நேபாளத்துடன் இணைந்து வெள்ள பாதிப்புக்கு தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)