ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நடத்தப்படும் ஓய்வூதிய நன்மை திட்டமாகும். EPFO திட்டத்தின் கீழ், அந்த ஊழியர் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் வரை முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இருவரும், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறார்கள். ஊழியர் தனது EPF பங்களிப்புக்கு வரிச் சலுகைகளைப் பெறுகிறார். மேலும் மற்ற சேமிப்புத் திட்டங்களை விட அதிக வட்டி விகிதத்தையும் பெறுகிறார். தற்போது, EPFO ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் 8.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது. EPF திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி ஓய்வூதியத்தை விரைவாக உருவாக்க, ஒருவர் மாதத்திற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
EPFO விதிகளின்படி, ஒரு ஊழியர் தனது EPF கணக்கில் அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 12% வரை பங்களிக்க முடியும். ஊழியர்களின் பங்கைப் பொருத்து, அவர் பணிபுரியும் நிறுவனமும் சமமான தொகையை பணியாளரின் கணக்கில் செலுத்த வேண்டும். அதாவது 12 சதவீத பங்களிப்பில், 8.33% EPSக்கு மற்றும் 3.67% EPFக்கு செல்கிறது.
கூடுதலாக, தொழிலாளர்களுக்கு விருப்பத்திற்கேற்ப கூடுதல் பங்களிப்பு செய்யும், ஊழியர்களுக்கான தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) வசதியும் உள்ளது. இதில், அவர்களின் 12% பங்களிப்பைத் தாண்டி கூடுதலாக பங்களிக்கலாம். அதிகபட்ச VPF பங்களிப்பு, அசல் பங்களிப்பின் அதே வட்டி விகிதத்துடன் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் மொத்தத் தொகையாகவும் இருக்கலாம். நினைவில் கொள்ளுங்கள், ஒரு நிதியாண்டில் உங்களின் தன்னார்வ மற்றும் அசல் EPF பங்களிப்புகள் ரூ. 2.5 லட்சத்தை தாண்டியிருந்தால், அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
ரூ.25000 சம்பளத்துடன் EPF-ன் கீழ் ரூ.1 கோடி தொகையை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும்?
25 வயதுடைய ஒரு நபர், அவரது அடிப்படை சம்பளம் ரூ.15,000 உடன் மாதம் ரூ.25,000 சம்பளம் பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த நபருக்கு ரூ.1 கோடி EPF தொகையை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும்? என்பதைப் பார்ப்போம்.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
சம்பள உயர்வு காரணமாக அந்த நபரின் EPF பங்களிப்பு ஒவ்வொரு வருடமும் 10% அதிகரிக்கும் என்று வைத்துக் கொள்வோம்.
அடிப்படை சம்பளம் – ரூ 15,000
மொத்த EPF பங்களிப்பு (அடிப்படை சம்பளத்தில் 12% + 3.67% ) = ரூ. 1750+550 = மாதம் ரூ.2300
இதன்படி மாதம் ரூ.2300 செலுத்த வேண்டும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்பை 10% அதிகரித்தால், EPF-இன் கீழ் ரூ.1 கோடியை உருவாக்க 30 ஆண்டுகள் ஆகும். அப்படியானால் 55 வது வயதில், தனிநபர் ரூ.1.07 கோடியை திரும்பப் பெறலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
