நிலையான வைப்புத்தொகையிலிருந்து (Fixed Deposit) மாதம் ரூ.10,000 வருமானம் பெற விரும்பினால், அதற்கான மொத்த ஆண்டு வட்டித் தொகை ரூ.1,20,000-ஆக இருக்க வேண்டும். பெரும்பாலான வங்கிகள், நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டியை மாதந்தோறும், காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் பெறும் வசதியை வழங்குகின்றன.

