Last Updated:
மலேசியாவில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால், ஓட்டப்பந்தய வீரர்கள் தங்கள் பயிற்சியை வீதியில் இருந்து மால்களுக்கு மாற்றியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே மலேசியாவில் சமீபத்தில் நிலவிய புகைமூட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் காற்றின் தரம் மிதமான நிலையில் உள்ள பகுதிகளில் ஆஸ்துமா மற்றும் இதயம், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் நீண்ட நேரம் வெளிப்புறத்தில் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக இந்தோனேசியாவின் கலிமந்தன் மற்றும் சுமத்ரா காடுகளில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் காற்றின் தரம் மோசமாகி வரும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Malaysia’s shopping malls are being used as running tracks for fitness groups, as toxic haze blown over from forest fires in Indonesia continues to force people indoors. https://t.co/jVQm9qnOM3
— Al Jazeera English (@AJEnglish) October 29, 2026
மற்றொரு பக்கம், மோசமான காற்றின் தரம் காரணமாக மலேசியாவில் பல முக்கிய மாரத்தான்கள், விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், கோலாலம்பூரில் உள்ள ஒரு ஆடம்பர வணிக வளாகத்தில் கூட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வேகமாக ஓடக்கூடாது, போட்டி போட்டு ஒருவரை ஒருவர் முந்தக்கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. சுமார் 50 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமாகப் பங்கேற்று 21 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ஓட்டப்பயிற்சி மேற்கொண்டனர். சிங்கப்பூரிலும் இதே பாணியில் 2 வணிக வளாகங்களில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். காற்றின் தரம் மோசமானதால் வணிக வளாகத்தில் ஓட்டப்பந்தய வீரர்கள் பயிற்சி எடுத்த காட்சிகள், இணையத்தை கலக்கி வருகின்றன.


