• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் அணில் மேனன் மற்றும் ஜோஷுவா ஆகியோர் விண்வெளி நடையை இன்று மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையம்(ஐ.எஸ்.எஸ்.) என்பது பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய விண்வெளி ஆய்வகமாகும். மணிக்கு சுமார் 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த சர்வதேச விண்வெளி நிலையம், சுமார் 90 நிமிடங்களில் பூமியை ஒருமுறை சுற்றி வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் நாசா விஞ்ஞானி அணில் மேனன் மற்றும் கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி ஜோஷுவா ஆகியோர் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை செய்து வருகின்றனர்.

விண்வெளி நடை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்படும் சிறு தொழில்நுட்பக் கோளாறுகள், பழுதடைந்த பாகங்கள் உள்ளிட்டவற்றை அங்கிருக்கும் விஞ்ஞானிகளே சரிசெய்கின்றனர். இந்த பணிக்காக அவர்கள் சில சமயம் விண்வெளி நிலையத்திற்கு வெளியே, அதாவது விண்வெளியில் நடந்து(மிதந்து) செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.

அவ்வாறு செல்லும்போது சில சமயங்களில் தங்கள் உடலை விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லாமல் விஞ்ஞானிகள் விண்வெளியில் பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இந்த பணிக்காக விண்வெளியில் நடந்து செல்வது விண்வெளி நடை(Space Walk) என்று அழைக்கப்படுகிறது.

சூரிய மின் தகடுகள்
அந்த வகையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் அணில் மேனன் மற்றும் ஜோஷுவா ஆகியோர் விண்வெளி நடையை இன்று மேற்கொண்டுள்ளனர். அவர்கள்(இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு) விண்வெளியில் நடந்து சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பாகத்தில் பழைய சூரிய மின் தகடுகளை அகற்றிவிட்டு புதிய மின் தகடுகளை பொருத்தியுள்ளனர்.

இந்த புதிய உபகரணமானது, அறிவியல் சோதனைகள், உயிர் காக்கும் அமைப்புகள் மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை தயாரிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி தொடர்பான வீடியோ காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



Read More

Previous Post

மலேசியா: காற்றின் தரம் மோசமானதால், ஓட்டப்பந்தய வீரர்கள் எடுத்த முடிவு! | World News (உலக செய்திகள்)

Next Post

அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு

Next Post
அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு

அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin