சர்வதேச சிலம்பக் கூட்டமைப்பு (ISF) ஏற்பாடு செய்த சர்வதேச சிலம்பப் போட்டி கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை மலேசியாவின் பெனாங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கையை சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று, தங்களது வீரத்தையும், திறமையையும், ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தி இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்:
ஜெயராஜா கிரஹர்ஷிஹன்
ஜெயராஜா அருஷிஹன்
சாதனா ஸ்ரீகுமார்
ஹர்ஷா கரிகாலன்
இம்மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் போட்டியிட்டு, 3 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர்.

