இவரது சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து காணப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் “ரத்மலானே சைமா” மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை இவர் இயக்கி வந்ததாக இலங்கைப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவரது சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து காணப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், “ரத்மலானே சைமா”, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘கஞ்சபானி இம்ரான்’ என்பவரின் பிரதான உதவியாளராக கருதப்படுகிறார்.