• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மத்திய மந்திரிசபை மாற்றம்: புதிய நிதி மந்திரியாகிறார் சக்திகாந்த தாஸ்? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in மலேசியா
Reading Time: 7 mins read
0
மத்திய மந்திரிசபை மாற்றம்: புதிய நிதி மந்திரியாகிறார் சக்திகாந்த தாஸ்? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி,மத்திய மந்திரிசபை ஓரிரு நாளில் மாற்றப்பட இருப்பதாகவும், நிர்மலா சீதாராமனுக்கு பதில் சக்திகாந்த தாஸ் புதிய நிதி மந்திரியாக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

மந்திரிசபை மாற்றம் செய்யப்படுகிறதா..?

மத்தியில் பா.ஜனதா அரசு 3-வது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மத்திய மந்திரிசபையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

இதன் அறிகுறியாக, மத்திய இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி, ஹர்ஷ் மல்கோத்ரா ஆகியோர் கட்சிப்பணிக்கு அனுப்பப்பட்டனர். ஜார்ஜ் குரியனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசியது மந்திரிசபை மாற்றத்திற்கான யூகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மாற்றம் நடக்கும் என கூறப்படுகிறது. இதனால், எந்தெந்த துறைகளில் மாற்றம் வரும், புதிய மந்திரிகள் யார்..நீக்கப்படுபவர்கள் யார் என்பன பற்றிய பேச்சுகளும் வெளிவரத் தொடங்கி விட்டன.

சக்திகாந்த தாஸ்

இந்த வகையில் டெல்லியில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது நிதித்துறை. தற்போது நிதித்துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன் இருக்கிறார். இவருக்கு பதிலாக பிரதமரின் முதன்மை செயலாளரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சக்திகாந்த தாஸ் நிதி மந்திரியாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நிர்மலா சீதாராமன், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு நியமிக்கப்படலாம் அல்லது அவர் கட்சிப்பணிக்கு அனுப்பப்படலாம் என சொல்லப்படுகிறது. இதுபோல மந்திரி மனோகர்லாலுக்கு துறைகள் மாற்றப்படும் என தெரிகிறது.

மேலும் பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி நீக்கப்பட்டு அவ ருக்கு பதிலாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து குறைந்தது 2 பேரை மந்தி ரிகளாக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள் மந்திரிசபை மாற்றத்தில் சிறப்பாக கவனிக்கப்படும் என தெரிகிறது.

கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானும் நீக்கப்படலாம் என பேச்சுகள் வருகின்றன. வினாத்தாள் கசிவு விவகாரங்களில் இவர் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.

ஸ்ரீகாந்த் ஷிண்டே

மந்திரிசபையில் புதிதாக நுழைபவர்களில் மராட்டிய மாநிலத்தின் ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா). ஆம் ஆத்மியில் இருந்து விலகிய ராகவ்சதா, அதுபோல திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய சில எம்.பி.க்களின் பெயர்களும் அடிபடுகின்றன. பீகார் முன்னாள் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் மந்திரிசபையில் சேர்க்கப்படலாம் என பேசப்படுகிறது. இதுபோல அனுராக் தாக்கூரும் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

மாற்றத்தின் ஒரு பகுதியாக தற்போதைய 6 இணை மந்திரிகளுக்கு பதவி பறிப்பு இருக்கும் என வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் தென்மாநில மந்திரிகள் அதிகம் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் அந்த துறையில் திறன்மிக்க ஒருவர் மந்திரிசபையில் புதிதாக நுழைவார் எனவும் சொல்லப்படுகிறது.மந்திரிசபையை வலுப்படுத்துவது போல கட்சியை வலுப்படுத்துவதிலும் அக்கறை காட்டப்படுகிறது. இதில் பெண்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

Previous articleமருத்துமனைக்கு தானமாக வழங்கப்பட்ட இயக்குநர் பாக்யராஜின் கண்கள் …
Next article56 தொகுதிகளிலும் அமைதியான வேட்புமனுத் தாக்கல்; மக்களின் வரவேற்பு தேசிய முன்னணிக்கு உற்சாகம் – ஓன் ஹாஃபிஸ்.
tamiltamil



Read More

Previous Post

ரூ.3 லட்சம் கோடி பாஸ்.. சும்மாயில்ல.. தமிழகம் குறிவைக்கும் புதிய டார்கெட் – மெகா பிளான்! | Tamil Nadu Eyes Big Share in India’s ₹3 Lakh Crore Defence Production Target by 2029

Next Post

Tamilmirror Online || தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

Next Post
Tamilmirror Online || தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

Tamilmirror Online || தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin