மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த இடைநிறுத்தம் 2026 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் தொடங்கவுள்ள சேவை
பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் அதன் தாக்கம் தனது விமானச் செயல்பாடுகளில் எவ்வாறு இருக்கும் என்பதையும் மதிப்பிட்டு வருவதாகவும் ஃபிட்ஸ் ஏர் கூறியுள்ளது.

தற்போதைய திட்டத்தின்படி, 2026 நவம்பர் 19 முதல் கொழும்பு-துபாய் விமான சேவையை மீண்டும் தொடங்க ஃபிட்ஸ் ஏர் எதிர்பார்க்கிறது. இருப்பினும், இது அக்காலத்தில் நிலவும் சூழ்நிலையையும் எதிர்கால நிகழ்வுகளையும் பொறுத்தே அமையும் என்று அந்த விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

