கோலாலம்பூர்:
மலேசியாவின் 7 மாநிலங்கள் மற்றும் தலைநகர் கோலாலம்பூரில் இன்றிரவு 9.00 மணி வரை இடி, மின்னல், பலத்த மழை மற்றும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மாலை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகள் மற்றும் சரவாக்கில் நிலவும் மேகமூட்டம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த வானிலையை எதிர்கொள்ளும் பகுதிகளாக கெடா: கூலிம், பண்டார் பாரு, பாலிங் மற்றும் சிக்; பேராக்: உலு பேராக், செலாமா மற்றும் முஆலிம்; கிளந்தான்: தும்பாட், கோத்தா பாரு, பாச்சோக் மற்றும் பாசீர் பூத்தே.; திரெங்கானு: உலு திரெங்கானு, மாராங், கோலா திரெங்கானு, கோலா நெரூஸ், செத்தியூ மற்றும் பெசுட்; பகாங்: கேமரன் ஹைலேண்ட்ஸ், லிப்பிஸ் மற்றும் ஜெராந்தூட்; சிலாங்கூர்: உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக்; கூட்டரசு பிரதேசம்: கோலாலம்பூர் மற்றும் சரவாக்: சிபு, சரிக்கே, பெத்தோங், மூக்கா மற்றும் காபிட் (சோங்) அது குறிப்பிட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், பலத்த காற்றினால் மரங்கள் அல்லது விளம்பரப் பலகைகள் சாயக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் அனைவரும் தீவிர விழிப்புணர்வுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.



