மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், வரும் நாட்களில் மத்திய கிழக்குக்கு ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக ‘தி வோஷிங்டன் போஸ்ட்’இன்று புதன்கிழமை(15) செய்தி வெளியிட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த மேலதிக துருப்புக்களில், யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் என்ற விமானம் தாங்கி கப்பல் மற்றும் அதனுடன் செல்லும் போர்க்கப்பல்களில் உள்ள சுமார் 6,000 வீரர்கள் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
மேலதிகமாக பத்தாயிரம் துருப்புகள்
பாக்சர் ஆம்பிபியஸ் ரெடி குரூப் மற்றும் மரைன் கார்ப்ஸின் 11வது மரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட்டைச் சேர்ந்த மேலும் 4,200 துருப்புக்களும் ஏப்ரல் மாத இறுதியில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வார கால போர்நிறுத்தம் ஏப்ரல் 22 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், இப்பகுதியில் ஏற்கனவே உள்ள படைகளுடன் இந்த மேலதிக துருப்புக்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்நிறுத்தம் முறிந்தால் தரைவழி நடவடிக்கை
ஈரானை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ள சுமார் 50,000 அமெரிக்கப் படையினருடன், புதிதாக வரவிருக்கும் இந்தப் படைகளும் இணையும்.

பலவீனமான போர்நிறுத்தம் முறிந்தால், மேலும் வான்வழித் தாக்குதல்கள் அல்லது தரைவழி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

