• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மதுராந்கத்தில் மரகதம் குமரவேலுக்கு மக்கள் எதிர்ப்பு! தேர்தலை நிறுத்திவிடுவோம் என தவெகவினர் மிரட்டல்! | Maduranthagam TVK candidate Maragatham Kumaravel faces opposition in Acharapakkam

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மதுராந்கத்தில் மரகதம் குமரவேலுக்கு மக்கள் எதிர்ப்பு! தேர்தலை நிறுத்திவிடுவோம் என தவெகவினர் மிரட்டல்! | Maduranthagam TVK candidate Maragatham Kumaravel faces opposition in Acharapakkam
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Published: Tuesday, September 29, 2026, 8:33 [IST]

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே தண்டராயப்பேட்டை பகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொதுமக்களுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டசபை தனித் தொகுதியில் அடுத்த மாதம் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

by election 2026 maduranthagam 2026

குறிப்பாக மரகதம் குமரவேல் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற நிலையில் அரசியல் சூழல் காரணமாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பிறகு தவெக கட்சியில் தன்னை
இணைத்துக் கொண்டார்

தமிழக வெற்றி கழகம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பாளராக மரகதம் குமரவேலை அறிவித்தது.

by election 2026 maduranthagam 2026

தற்போது தவெக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மரகதம் குமரவேல் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக வாக்கு சேகரிக்கும் மரகதம் குமரவேலுக்கு பல்வேறு கிராமங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அச்சிறுப்பாக்கத்தை அடுத்த தண்டராயப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வேட்பாளரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒரு தரப்பு பொதுமக்களுக்கும், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

by election 2026 maduranthagam 2026

இதனைச் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் கைப்பேசிகளை பிடுங்கிய தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களை மிரட்டல் விடுத்து “நாங்கள் வெற்றி பெற்ற பிறகு உங்களை பார்த்து கொள்வதாக” ஆவேசமாக பேசி சென்றனர்.

மேலும் “நாங்கள் நினைத்தால் தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் நிறுத்தி விடுவோம்” எனவும் எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பொதுமக்களுக்கும் தமிழக வெற்றிக்கு கழக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

by election 2026 maduranthagam 2026

மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது கொழுமணிவாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் தவெக பிரச்சாரங்களின் போது அதிமுக, திமுக ஆதரவாளர்கள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சுயலாபத்திற்காக ஓட்டு போட்ட மக்களை முட்டாளாக்கிவிட்டு மறுபடியும் ஓட்டு கேட்க வருவீர்களா என பொதுமக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் முதல்வர் விஜய், மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அது போல் தாராபுரம் தொகுதியிலும் வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

by election 2026 maduranthagam 2026

இந்த எதிர்ப்பால் தாராபுரத்தில் நேற்று முழுவதும் சத்தியபாமா பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. எங்கு சென்றாலும் எதிர்ப்பு என்பதால் இந்த இரு வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

English summary

Maduranthagam TVK candidate Maragatham Kumaravel faces oppose when she goes for election campaign. People expresses anger over her by criticising her resignation.

Read More

Previous Post

சிலையை உடனடியாக மீள நிறுவுங்கள் – யாழ்ப்பாணத்தில் வெடிக்க உள்ள போராட்டம்

Next Post

Post Office | போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் மாதம் ரூ.6,000 முதலீடு; 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office | போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் மாதம் ரூ.6,000 முதலீடு; 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Post Office | போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் மாதம் ரூ.6,000 முதலீடு; 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin