• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மக்களே என் குடும்பம்… மீண்டும் வெற்றியை நோக்கி யூ பூன் லாய் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in மலேசியா
Reading Time: 8 mins read
0
மக்களே என் குடும்பம்… மீண்டும் வெற்றியை நோக்கி யூ பூன் லாய் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


க.கலை,  போர்ட்டிக்சன்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெகிரி செம்பிலான் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமீனுடின் ஹருன் தலைமையில், 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் தங்களது கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தி தீவிர தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் சுவா, லுக்குட், ஸ்ரீ தஞ்சோங், பகான் பினாங் மற்றும் லிங்கி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் சுவா, ஸ்ரீ தஞ்சோங், பகான் பினாங் மற்றும் லிங்கி ஆகிய தொகுதிகளில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். லுக்குட் தொகுதியில் கூட்டணி வேட்பாளராக டிஏபி கட்சியைச் சேர்ந்த சூ கென் ஹவா போட்டியிடுகிறார்.

சுவா சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளராக யூ பூன் லாய் மீண்டும் தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக போட்டியிடுகிறார்.

சுவா சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 15,129 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மலாய் வாக்காளர்கள் 3,788 பேரும், இந்திய வாக்காளர்கள் 3,186 பேரும், சீன வாக்காளர்கள் 8,080 பேரும், மற்ற இனங்களைச் சேர்ந்த 75 பேரும் உள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில், பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிட்ட யூ பூன் லாய் 8,172 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் தான் ஜாய் சுன் 1,874 வாக்குகளைப் பெற்றார்.

      மீண்டும் சுவா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறும் நோக்கில், யூ பூன் லாய் காலை முதல் இரவு வரை வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

மக்களிடம் வாக்கு சேகரித்தபோது, மக்கள் ஒசைக்காக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாவது:

“கடந்த தேர்தலில் நான் முதல் முறையாக சுவா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர், ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்து வந்துள்ளேன்.

அதே நேரத்தில், தொகுதி மக்கள் அனைவரையும் எனது குடும்பமாகவே கருதி பழகி வருகிறேன். எந்த இனத்தையும் நான் வேறுபடுத்திப் பார்த்ததில்லை. ஆலயங்கள், பள்ளிவாசல்கள், சீன ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், சீன மற்றும் மலாய் ஆரம்பப் பள்ளிகள் என அனைத்து சமூகங்களுக்கும் சமமாக நிதி உதவிகளை வழங்கி வந்துள்ளேன்,” என்றார்.

“கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளேன். குறிப்பாக தானா மேரா வீடமைப்பு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நான் மக்களுக்கு செய்து வரும் சேவைகளின் அடிப்படையில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். அதே நேரத்தில், இன்னும் பல சேவைகளை தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டியுள்ளது. அதனால்தான் மீண்டும் போட்டியிடுகிறேன்.

மக்களின் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று யூ பூன் லாய் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி போட்டியிடுகிறது. இதில் பக்கத்தான் ஹராப்பான் 16 தொகுதிகளிலும், டிஏபி 11 தொகுதிகளிலும், அமானா 9 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கட்சியும் அனைத்து 36 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.



Read More

Previous Post

LIC-ன் ஜாக்பாட் பாலிசி திட்டம்… 100 வயது வரை ரூ.40,000 பெறலாம்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக இரண்டாவது முறையாகவும் வோல்கர் டர்க் தெரிவு

Next Post
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக இரண்டாவது முறையாகவும் வோல்கர் டர்க் தெரிவு

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக இரண்டாவது முறையாகவும் வோல்கர் டர்க் தெரிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin