உலகத்தில் வளர்ந்து வரும் தொழிநுட்பம் அதாவது, மனிதர்கள் எப்படி யோசித்து, கற்றுக்கொண்டு, முடிவு எடுக்கிறார்களோ அதைப் போல, கணினி அல்லது மெஷின்களும் செயல்படச் செய்வதற்கான தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு (AI- Artificial Intelligence)
அதன் அடிப்படையில் டிஜிட்டல் அமைச்சர் நாடாளுமன்ற அலுவலகம் இந்த செயற்கை நுண்ணறிவுப் பற்றி பயிற்சி ஏற்பாடு செய்திருந்தது என்று டிஜிட்டல் அமைச்சரின் அரசியல் செயலாளர் சுரேஸ் சிங் கூறினார்.
இந்த செயற்கை நுண்ணறிவின் பற்றி வயதானர்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆகிய 100க்கும் மேற்பட்டோர் கெப்போங் திருமுருகன் ஆலயத்தில் 5 மணி நேரம் பயிற்சியில் பங்கேற்றன என அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். மேலும், இந்தப் பயிற்சி கட்டங்கட்டமாக நடைபெறும் என அவர் உறுதியளித்தார்.
எஸ்.ஷாண்





