Last Updated:
அனைத்து மாநிலத்திற்கும் ஒரு மொழி உள்ளது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும். மும்பையில் மராத்தியை மதிக்க வேண்டும் என ராஜ் தாக்ரே பேச்சு.
மகாராஷ்டிராவில் இருந்துகொண்டு ஒருவரால் மராத்தி மொழியை பேச முடியவில்லை என்றால், அவர் கன்னத்தில் அறையுங்கள் என ராஜ் தாக்ரே பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மும்பையில் தனது வருடாந்திர குடி பத்வா பேரணியில் உரையாற்றினார். அப்போது ஔரங்கசிப்பின் கல்லறையை இடிப்பது குறித்தான சர்ச்சைக்கு, “இந்த மக்கள் மராட்டியர்களை அழிக்க முயன்றனர், ஆனால் அதற்கு பதிலாக அழிக்கப்பட்டனர் என்பதை உலகம் அறிய வேண்டாமா? அதனால் அவர்களது அடையாளங்கள் இருக்க வேண்டும். வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதை நிறுத்தி, வரலாற்றுப் புத்தகங்களை ஆராயுங்கள்,” எனக்கூறினார்.
மேலும் மராத்தி மக்களிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த ராஜ் தாக்கரே, “மும்பையில் இருவர் மராத்தி தெரியாது எனக் கூறினால் அவரை அறையுங்கள். ஒரே நாடு என்றெல்லாம் பேசாதீர்கள். அனைத்து மாநிலத்திற்கும் ஒரு மொழி உள்ளது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும். மும்பையில் மராத்தியை மதிக்க வேண்டும்.
மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கும் போது, தமிழ்நாடு அதன் பெருமைக்காக போராடுகிறது. அவர்கள் இந்தி மொழி வேண்டாம் எனத் தைரியமாக கூறுகிறார்கள். ஆனால் நாம் சரணடைந்த சமூகமாக உருவாகிக்கொண்டிருக்கிறோம். மராத்தி மக்களைப் போல குழப்பமான மக்கள் யாரையும் நான் பார்த்ததில்லை,” என்றார்.
இதையும் படிக்க: இன்னும் மூன்றே மாதம் தான்… மகளிர் உரிமை தொகை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!
மேலும் “மதம் உங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கும்போது அல்லது கலவரங்களின் போது மட்டுமே ஒரு இந்து இந்துவாக அடையாளம் காணப்படுகிறார். இல்லையெனில், இந்துக்கள் சாதியால் பிரிக்கப்படுகிறார்கள்,” எனத் தெரிவித்தார்.
March 31, 2025 6:01 PM IST


