“தன்னுடைய பொதுச்செயலாளர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவும், தன் மகனையும் தன் சகாக்களையும் ரெய்டு, கைது அஸ்திரங்களிலிருந்து பாதுகாக்கவும்தான் அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார் EPS. ஆனால், ‘தமிழகத்தின் நலனுக்காகச் சந்தித்தேன்’ என்று பச்சையாகப் பொய் சொல்வது, மக்களை முட்டாளாக்கும் செயல். இதனால் மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அவர்மீதான நம்பிக்கை குறையும். மேலும் இந்தச் சந்திப்பை, முறையாக மீடியாக்களிடம் தெரிவித்துவிட்டே செய்திருக்க முடியும். இவ்வளவு சர்ச்சைகள் எழுந்திருக்காது. ஆனால், தன் சொந்தப் பிரச்னைகளின் பதற்றத்தில் மொத்தமாகச் சொதப்பியிருக்கிறார் எடப்பாடி. இப்போது அவர் காட்டி வந்த வீராப்பு பிம்பமெல்லாம் சுக்குநூறாக உடைந்துபோயிருக்கின்றன”

