சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞனான அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை
நிச்சயமாக விலக்களிக்கப்படும் என தான் நம்புவதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில பேர் அனோஜனுடைய கழுத்து வெட்டப்பட வேண்டும் என்று எண்ணுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அனோஜனுடைய விடுதலை என்பது இப்போதைய சூழ்நிலையில் ராஜதந்திர, நகர்வுகள் உருக்கமான கோரிக்கைகள் மக்களுடைய கவனஈர்ப்பு இவையெல்லாம் ஒருங்கிணைந்த ஒரு பலமாக
மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது.
இலங்கையினுடைய முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் மத தலைவர்கள் அரசியல் தலைவர்கள் என கூட்டாக அறிக்கைகளை விடுவது பேச தயாராக இருக்கிறோம் என்று சொல்வது இவையெல்லாம் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விடயமாக இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலும் பல வியடங்களை கீழுள்ள காணொளியில் காண்க….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

