International
oi-Nantha Kumar R
ரோம்: இத்தாலி பள்ளிகளில் மாணவிகள் புர்கா மற்றும் நிகாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத்துக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அமைச்சரவை கொண்டு வந்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. பல இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஹிஜாப், புர்கா, நிகாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சில நாடுகளில் ஆடை கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இருப்பது இல்லை.
ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இல்லாத நாடுகளில் சில நேரங்களில் இஸ்லாமிய பெண்களின் ஆடைகள் குறித்த விவகாரம் சர்ச்சையாவது அவ்வப்போது நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது சர்ச்சையானது.
அந்த வகையில் தற்போது இத்தாலி பள்ளிகளில் மாணவிகள் புர்கா, நிகாப் அணிய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இத்தாலியை எடுத்து கொண்டால் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சியின் தலைவராக இருக்கும் ஜார்ஜியா மெலோனி தான் பிரதமராக இருக்கிறார். இவர் தீவிரமான வலதுசாரி கொள்கையை கொண்டவர். இவரும், பிரதமர் நரேந்திர மோடியும் நல்ல நண்பர்கள்.
இந்நிலையில் தான் இத்தாலி பள்ளிகளில் மாணவிகள் புர்கா, நிகாப் அணிவதை தடை செய்யும் சட்டத்துக்கு ஜார்ஜியோ மெலோனியின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி சட்டமாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி இத்தாலி பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் இத்தாலி மொழியில் புலமை இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையை 30 சதவீத வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். இத்தாலி மொழியை மாணவர்கள் கற்று கொள்ள கூடுதல் வசதிகள் கொண்டு வருவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர பள்ளியில் குறிப்பிட்ட குழந்தை இத்தாலி மொழி தெரியாமல் மற்றவர்களுடன் சேர்ந்து செயல்படுவதில் சிரமத்தை எதிர்கொண்டால் அக்குழந்தையின் பெற்றோரும் இல்வச இத்தாலி மொழி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்படும். இதை மீறுவோருக்கு 1,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும். 1,000 யூரோக்கள்என்பது இன்றைய கணக்கிப்படி ரூ.1.09 லட்சமாகும்.
இத்தாலியை எடுத்து கொண்டால் தற்போது வெவ்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தாலியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளன. இதனால் அவர்கள் இத்தாலி மொழி தெரியாமல் திணறி வருகின்றனர். இதனை போக்கி மாணவர்கள் இத்தாலி மொழியை கற்கும் வகையில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக இதுபற்றி ஜார்ஜியா மெலோனி கூறுகையில், ” மாணவிகள் தங்களின் முகத்த மறைக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். உண்மையான அல்லது கற்பனையான மரபின் பெயரால் ஒருவர் தன் முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என்பதை இத்தாலியில் யாரும் தீர்மானிக்க முடியாது. அதேபோல், ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்கும் இத்தாலி மொழியை கற்பதும் கட்டாயமாக்கப்படும்” என்று கூறினார். அதன்படியே தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார்.
இப்படி உத்தரவு போட்டுள்ள ஜார்ஜியா மெலோனி, பிற நாட்டின் தலைவர்களை போல் பிரதமர் மோடியுடன் நட்புடன் இருக்கிறார். குறிப்பாக இவர்கள் 2 பேரும் ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது Melodi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டாகும். இது இருவருக்கும் இடையேயான நெருங்கிய நட்பை பாறைசாற்றும் வகையில் இருக்கிறது. அதாவது ஜார்ஜியா மெலோனி (Meloni) என்பதில் உள்ள Melo என்பதையும் மோடியின் (Modi) பெயரில் உள்ள கடைசி 2 ஆங்கில எழுத்தான Di என்பதையும் சேர்த்து Melodi என்று சொல்வார்கள். ஒவ்வொரு முறை இருவரும் சந்திக்கும்போது இந்தஹேஷ்டேக் டிரெண்ட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

