• Login
Monday, July 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பெட்டாலிங் ஜெயாவின் திடீர் வெள்ளம்: வெறும் அனுதாபம் தேவையில்லை; தெளிவான காலக்கெடுவுடன் விளக்கம் தேவை – எம்பி லீ சியான் சுங் அதிரடி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பெட்டாலிங் ஜெயாவின் திடீர் வெள்ளம்: வெறும் அனுதாபம் தேவையில்லை; தெளிவான காலக்கெடுவுடன் விளக்கம் தேவை – எம்பி லீ சியான் சுங் அதிரடி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பெட்டாலிங் ஜெயா பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு குறித்துப் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங், சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகார அமைப்பான பெட்டாலிங் ஜெயா மாநகராண்மைக் கழகத்திடம் (MBPJ) இருந்து இதுவரை முறையான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே 6-ஆம் தேதி இப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் அதே போன்றதொரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பொதுமக்களைப் பாதித்துள்ளது.

மே மாத வெள்ளத்திற்குப் பிறகு, சுங்கை பெஞ்சாலா மற்றும் சுங்கை கிள்ளான் ஆகிய ஆறுகளின் வழித்தடங்களில் வெள்ளத்தடுப்புச் சுவர்கள் மற்றும் நீர் வழிந்தோடும் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்த நீண்ட காலத் திட்டங்களை வைத்துள்ளதாக MBPJ தெரிவித்து இருந்தது.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்துப் பாதிக்கப்பட்ட வணிக உரிமையாளர்களுக்கோ அல்லது குடியிருப்பாளர்களுக்கோ எவ்வித விளக்கமும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்று எம்பி லீ சியான் சுங் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின் லீ சியான் சுங் வெளியிட்ட அறிக்கையில்: “வெள்ளம் வடிந்த பிறகு அங்கு மிஞ்சுவது வெறும் சேறும் சகதியும் மட்டுமல்ல; மீண்டும் மீண்டும் ஒரே துயரத்தை எதிர்கொள்ளும் மக்களின் ஏமாற்றமும் சோர்வும்தான். ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும்போது அவர்கள் தங்களின் சொந்தப் பணத்தைச் செலவழித்துச் சுத்தப்படுத்தவும், சேதங்களைச் சரிசெய்யவும் வேண்டியுள்ளது. இந்த நிலை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆறுதலும் அனுதாபமும் மட்டும் போதாது என்று குறிப்பிட்ட அவர், வெள்ளத்திற்கான உண்மையான காரணம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் அறிக்கை மற்றும் இவற்றுக்கான தெளிவான காலக்கெடுவை (Timeline) MBPJ வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு, பாதிக்கப்பட்ட வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் எம்பிஜே அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் கூட்டம் ஒன்றிற்குத் தாம் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் லீ சியான் சுங் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

கிருஷ்ணகிரியில் ARIVAM.. விஜயை சந்தித்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அதிகாரிகள் சொன்ன மெகா திட்டம்! | Delta Electronics to Set Up ARIVAM AI Data Centre & Renewable Energy Hub in Krishnagiri – CM Vijay’s Mega Push

Next Post

கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் செம்மணியில் புதைக்கப்பட்ட மக்கள்!

Next Post
கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் செம்மணியில் புதைக்கப்பட்ட மக்கள்!

கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் செம்மணியில் புதைக்கப்பட்ட மக்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin