• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
கொழும்பு
/
புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்

கொழும்பு – புறக்கோட்டையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் தர நியமங்களை மீறிய 801 பிளாஸ்டிக் போத்தல்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.


கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொண்டு, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை திடீர் சுற்றிவளைப்புகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளது. 

இந்த நடவடிக்கையின் போது தர நியமங்களை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 801 பிளாஸ்டிக் போத்தல்கள் அதிகாரிகளால் வழக்குப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலதிக விசாரணைகள் முடிவடைந்ததும் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்படும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.

குடிநீரைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரநிலை கட்டாயமாகும். 

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் போத்தல்கள், இலங்கை தரநிலைகள் நிறுவகத்தின் தரச் சான்றிதழ் குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும். அதேவேளை, இறக்குமதி செய்யப்படும் போத்தல்கள் அந்நிறுவகத்தின் இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்டு, உரிய விற்பனை அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது சட்டத் தேவையாகும்.

வர்த்தகர்கள் இவ்வாறான போத்தல்களை விற்பனை செய்வதற்கு முன்னர் சட்ட மற்றும் தரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதுடன், கொள்வனவு தொடர்பான பற்றுச்சீட்டுகள் மற்றும் விநியோகஸ்தர் விவரங்களை முறையாகப் பேண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நுகர்வோர், உள்நாட்டு உற்பத்திகளை வாங்கும் போது SLS தரக்குறியீட்டையும், இறக்குமதி செய்யப்பட்டவைகளுக்கு உரிய அங்கீகாரத்தையும் சரிபார்த்து பற்றுச்சீட்டுடன் வாங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகளை நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 

மேலும், சந்தையில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, பொதுமக்கள் அறிவிக்க முடியும்.

Read More

Previous Post

தாராபுரத்தில் இன்று விஜய் பிரச்சாரம்.. மொத்தமாக முடக்கப்பட்ட கோவை திருப்பூர் | CM Vijay to campaign in Dharapuram today heavy restriction in Coimbatore Tiruppur

Next Post

அமெரிக்கா: வீட்டு வேலை செய்யும் அதிநவீன ரோபோக்கள் அறிமுகம்! | World News (உலக செய்திகள்)

Next Post
அமெரிக்கா: வீட்டு வேலை செய்யும் அதிநவீன ரோபோக்கள் அறிமுகம்! | World News (உலக செய்திகள்)

அமெரிக்கா: வீட்டு வேலை செய்யும் அதிநவீன ரோபோக்கள் அறிமுகம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin