• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தாராபுரத்தில் இன்று விஜய் பிரச்சாரம்.. மொத்தமாக முடக்கப்பட்ட கோவை திருப்பூர் | CM Vijay to campaign in Dharapuram today heavy restriction in Coimbatore Tiruppur

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தாராபுரத்தில் இன்று விஜய் பிரச்சாரம்.. மொத்தமாக முடக்கப்பட்ட கோவை திருப்பூர் | CM Vijay to campaign in Dharapuram today heavy restriction in Coimbatore Tiruppur
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Pavithra Mani

Time
Published: Wednesday, September 30, 2026, 7:59 [IST]

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று மதியம் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக கோவை தொடங்கி தாராபுரம் வரை, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கறார் நடவடிக்கை எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் தவெகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கே தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

by election 2026 Dharapuram Vijay

விஜய் பிரசாரம்

இந்நிலையில், தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, அந்தக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக காலை சென்னையில் இருந்து கிளம்பி, மதியம் 12.30 மணியளவில் கோவை விமான நிலையம் வரவுள்ளார். தவெகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். பிறகு சாலை மார்க்கமாக தாராபுரம் சென்று 3 மணியளவில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இயல்பு வாழ்க்கை முடக்கம்

விஜய் வருகைக்காக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இதுவரை இல்லாதளவுக்கு கெடுபிடி காட்டப்படுகிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை போக்குவரத்து முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் பார்க்கிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் நீலாம்பூர் வரையும், கருமத்தம்பட்டி முதல் காரணம்பேட்டை வரையும் சாலையின் இருபுறமும் அடைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன. தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்கு செல்ல பயணிப்பார்கள். வெளியூர்களில் இருந்தும் பேருந்துகள் செல்லும். விஜய் வரும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்காமல், நாள் முழுவதும் கெடுபிடிகளை காட்டுவது மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்துள்ளது.

காவல் துறை அறிவிப்பு

கோவை மாநகர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் விஜய் இன்று (புதன்கிழமை) கோவை வரவுள்ளார். இதற்காக கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து, சின்னியம்பாளையம், ஏர்போர்ட் வழியாக மாநகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து எல் அண்ட் டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.

போக்குவரத்து மாற்றம்

நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் நீலாம்பூரில் எல் அண்ட் டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர். ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம். கோவை மாநகருக்குள் இருந்து அவினாசி சாலை வழியாக வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், லட்சுமி மில்ஸ் சந்திப்பில் யுடர்ன் செய்து புலியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் அண்ட் டி பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

கோவை மாநகரில் இருந்து அவினாசி சாலை வழியாக மாநகருக்கு வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள், அவினாசி சாலை, வி.கே ரோடு வழியாக வரும் வாகனங்கள், மசக்காளிபாளையம் சாலை வழியாக சிங்காநல்லலூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவிநாசி சாலை, ஹோப்ஸ் வழியாக வரக்கூடிய வாகனங்கள், டைட்டல் பார்க் சந்திப்பில் யுடர்ன் செய்து காமராஜர் சாலை, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ஏர்ப்போர்ட்டில் பார்க்கிங் தடை

காளப்பட்டி சந்திப்பில் இருந்து சித்ரா அவினாசி சாலை வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் காளப்பட்டி சந்திப்பில் இருந்து தென்னம்பாளையம் வழியாக அவினாசி சாலைக்கு செல்லலாம். கோல்ட்வின்ஸ் சாலையில் இருந்து அவினாசி சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஹவுசிங்யுனிட் ரோடு மாருதி பேக்கிரி ஜங்சனில் இருந்து வலது புறம் திரும்பி விரையம்பாளையம் சாலை வழியாக காளப்பட்டி சந்திப்பிற்கு செல்லலாம்.

முதலமைச்சர் வருகையை ஒட்டி இன்று விமான நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள், தங்களது பயண நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை கால் டாக்ஸிகள் மற்றும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்திற்குள் பார்க்கிங் செய்வதற்கு அனுமதியில்லை. இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

English summary

Chief Minister Vijay to campaign in Dharapuram today. Due to his visit police implemented heavy restrictions in Coimbatore and Tiruppur.Today Traffic diverted in Coimbatore ahead of CM Vijay visit.

Read More

Previous Post

கொழும்பு புறநகர் பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தப்பட்ட வர்த்தகர்

Next Post

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல் – Sri Lanka Tamil News

Next Post
புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல் – Sri Lanka Tamil News

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin