ஈரான் போர் ஆரம்பமானதிலிருந்து உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளன.
சர்வதேச சந்தையில் இன்றையதினம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,766.53 டொலர்களாக விற்பனையாகின்றது.
மசகு எண்ணெயின் விலை
அதேநேரம், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 76.25 டொலர்களாக விற்பனையாகின்றது.

அதேநரம், ஈரானின் கடல்சார் போக்குவரத்து மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக மசகு எண்ணெய் விலையிலும் இன்று ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன.
உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

